கல்யாண கலை வந்துடுச்சே..! சேலையழகில் தமன்னா போட்ட புகைப்படத்திற்கு தெறிக்கும் கமெண்ட்ஸ்..! போட்டோஸ்..!

First Published | Aug 7, 2023, 8:12 PM IST

நடிகை தமன்னா, சேலை அழகில் வெளியிட்டுள்ள புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகிறார்கள்.
 

தமிழ் சினிமாவில் விஜய், அஜித், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்டு வந்த தமன்னா, சமீப காலமாக மார்க்கெட் போனதால் பாலிவுட் திரையுலகில் கவனம் செலுத்த துவங்கினார். திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் இவரின் டார்கெட் வெப் சீரிஸ் பக்கம் திரும்பியது.

அந்த வகையில் ஏற்கனவே இவர் ஹாட் ஸ்டாரின் ஒளிபரப்பான 'நவம்பர் ஸ்டோரி' தொடரில் நடித்திருந்த நிலையில், இதற்க்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதை தொடர்ந்து ஹிந்தியில்  ஜீ கர்தா மற்றும் லஸ்ட் ஸ்டோரீஸ் 2 என அடுத்தடுத்து 2 வெப் தொடர்களில் நடித்தார். 

39 வயது ஹீரோவுக்கு அம்மாவாகும் த்ரிஷா.! ஷாக் ஆன ரசிகர்கள்.!

Tap to resize

இந்த இரண்டு வெப் தொடர்களும் கடந்த மாதம் ரிலீஸ் ஆகி சோசியல் மீடியாவில் பேசு பொருளாக மாறியது. குறிப்பாக லஸ்ட் ஸ்டோரீஸ் 2 வெப் தொடரில், தமன்னா நடிகர் விஜய் வர்மாவுடன் நடித்த போது அவரின் காதல் வலையிலும் விழுந்தார்.

ஆரம்பத்தில் இதனை, இருவருமே மறுத்தாலும்... இவர்களின் லிப் லாக் புகைப்படங்கள் வெளியாகி படு வைரலானது. மேலும் ஒரு நிலையில் இருவருமே காதலிப்பதை வெளிப்படுத்திய நிலையில்.. அவ்வப்போது இருவரும் டேட்டிங் செய்து வருவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

'கயல்' சீரியலில் இப்படி ஒரு ட்விஸ்ட்டா! தப்பித்த எழில்.. ஆர்த்திக்கு நடந்த திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா

தமிழிலும், நடிகை தமன்னா... ஜெயிலர் படத்தில் டான்ஸ் ஆடிய 'காவாலா' பாடல் சூப்பர் ஹிட் வரவேற்பை பெற்று வருகிறது. சமீபத்தில் நடந்த ஆடியோ லான்ச் நிகழ்ச்சியிலும் தமன்னா காவாலா பாடலுக்கு ஆட்டம் போட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது தமன்னா, அழகு தேவதை போல்... பச்சை சில்க் சேலையில், க்ராண்டானா பிளவுஸ் அணிந்து எடுத்து கொண்ட சில புகைப்படங்களை வெளியிட, தாறுமாறாக லைக்குகளை இந்த புகைப்படம் குவித்து வருகிறது. ரசிகர்களும் தமன்னாவுக்கு கல்யாண கலை வந்து விட்டது என கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர் இப்படி தான் நடந்துருக்கு! விஜய் டிவி சீரியல் நடிகையிடம் நடுரோட்டில் அடிவாங்கிய நபர்?

Latest Videos

click me!