நடிகை த்ரிஷா தமிழில், தளபதி விஜய்க்கு ஜோடியாக 'லியோ' படத்தில் நடித்த முடித்துள்ளார். இதைத்தொடர்ந்து, 'விடாமுயற்சி' படத்திலும் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அடுத்தடுத்து, கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் த்ரிஷா தெலுங்கில் 39 வயது ஹீரோவுக்கு அம்மாவாக நடிக்க உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
'பொன்னியின் செல்வன்' படத்தின் வெற்றிக்கு பிறகு, தமிழில் விஜய் - அஜித் என தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் ஹீரோக்களுக்கு ஜோடி போட்டு வரும், திரிஷா... சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ப்ரோ டாடி என்கிற திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். மலையாளத்தில் மோகன்லால் நடித்த கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி நடிக்க உள்ளதாகவும், மீனா நடித்த கதாபாத்திரத்தில் தான் நடிகை திரிஷா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் மோகன்லாலுக்கு மகனாக பிரித்விராஜ் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரத்தில் நடிகர் ஷர்வானந்த் நடிக்க உள்ளார்.
'கயல்' சீரியலில் இப்படி ஒரு ட்விஸ்ட்டா! தப்பித்த எழில்.. ஆர்த்திக்கு நடந்த திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா
அதாவது திருமண வயதில் மகன் இருக்கும்போது, த்ரிஷா கர்ப்பமாகும் நிலையில் வீட்டில் ஏற்படும் பிரச்சனைகள் தான் இந்த படத்தின் கதை களம் என கூறப்படுகிறது. 'ப்ரோ டாடி' படத்தில் தனக்கு அழுத்தமான கதாபாத்திரம் இருப்பதன் காரணமாகவே, 39 வயது ஹீரோவுக்கு அம்மாவாக நடிக்க திரிஷா ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.