நான் அடிக்கடி அதை சாப்பிடுவேன் தெரியுமா?.. வினோத உணவுப்பழக்கம்? - மனம் திறந்த cute நடிகை சாய் பல்லவி!

Ansgar R |  
Published : Aug 07, 2023, 05:58 PM ISTUpdated : Aug 08, 2023, 08:01 AM IST

மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்றிருந்தாலும், பல தமிழ் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் ஒரு நடிகை தான், டாக்டர் சாய் பல்லவி. நீலகிரி அருகே கடந்த 1992ம் ஆண்டு பிறந்த சாய் பல்லவி, கடந்த 2015ம் ஆண்டு தனது மருத்துவ படிப்பை முடித்தார். சிறுவயது முதலிலேயே நடிப்பில் நாட்டமருந்த போதும் அந்த ஆசையை எல்லாம் தள்ளி வைத்துவிட்டு, அவர் மருத்துவப் படிப்பில் சேர்ந்து டாக்டர் ஆனார்.

PREV
13
நான் அடிக்கடி அதை சாப்பிடுவேன் தெரியுமா?.. வினோத உணவுப்பழக்கம்? - மனம் திறந்த cute நடிகை சாய் பல்லவி!

ஆனால் நடிகை சாய் பல்லவி இளம் பருவத்திலேயே தமிழில் வெளியான கஸ்தூரிமான் என்ற திரைப்படத்திலும், ஜெயம் ரவி அவர்களுடைய நடிப்பில் வெளியான தாம் தூம் என்ற திரைப்படத்திலும் சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார் என்று பல தகவல்கள் தெரிவிக்கின்றது. இருப்பினும் அவர் நாயகியாக நடித்து முதல் முதலில் வெளியான திரைப்படம், கடந்த 2015ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஒரே திரைப்படம் அவரை புகழில் உச்சிக்கே கொண்டு சென்றது என்றால் அது மிகையல்ல.

அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர் இப்படி தான் நடந்துருக்கு! விஜய் டிவி சீரியல் நடிகையிடம் நடுரோட்டில் அடிவாங்கிய நபர்?

23

தமிழில் இவர் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான திரைப்படம் தான் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி படத்தின் இரண்டாம் பாகம். அதன் பிறகு சூர்யாவுடன் என்ஜிகே திரைப்படமும் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. 

தமிழ் தெலுங்கு மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் சிறந்த நடிகையாக விளங்கிவரும் சாய்பல்லவி சிறுவயதில் இருந்தே நடனம் கற்றவர் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கடந்த 2008ம் ஆண்டு வெளியான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா? என்ற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றவர் சாய் பல்லவி என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 

33

கடந்த சில காலங்களாக ஆன்மீக பயணத்தில் ஈடுபட்டு வரும் சாய் பல்லவி ஒரு தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், தன்னிடம் உள்ள ஒரு வினோதமான உணவு பழக்கத்தை பற்றி கூறியிருக்கிறார். 

சாய்பல்லவி தான் அடிக்கடி விபூதி உண்ணும் பழக்கம் கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார், தனது கை பையில் எப்பொழுதும் விபூதி இருக்கும் என்றும், அதை உண்பது தனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார். தான் உண்பது ஒரு விசேஷமான மரத்திலிருந்து செய்யப்பட்ட விபூதி என்றும் அவர் கூறியுள்ளார். தமிழகத்தை பொறுத்தவரை விபூதி உண்பது பல இடங்களில் உள்ள இயல்பான பழக்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் வரலாற்றில் முதன்முறையாக... இந்த சீசனில் ஒன்னில்ல 2 வீடு - ஆனா அதுல ஒரு டுவிஸ்ட் இருக்கு!

Read more Photos on
click me!

Recommended Stories