சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் விஜய் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற பொழுது அங்கு குழுமி இருந்த அவருடைய ரசிகர்கள், நீங்கள் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கூறினார். அதற்கு பதில் அளித்து பேசிய நடிகர் விஜய், எல்லா துறையிலும் நம்பர் ஒன் ஸ்டார் என்ற அந்தஸ்து இருக்கிறது. அந்த இடத்தை அடைவதற்கு அனைவரும் உழைத்து வருகிறார்கள். நானும் உழைத்துக் கொண்டு இருக்கிறேன், ஆனால் எப்பொழுதுமே சூப்பர் ஸ்டார் பட்டத்திற்காக நான் ஆசைப்பட்டதில்லை, அவர் ஒருவர் மட்டுமே சூப்பர் ஸ்டார் என்று அவர் பதில் அளித்தார்.
அதேபோல மீண்டும் ஒருமுறை ரசிகர்களை சந்தித்து அவர் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பொழுது, நீங்கள் தான் நிச்சயமாக அடுத்த சூப்பர் ஸ்டார் என்று அவர் ரசிகர்கள் கூறியபோது, அவர் சிரித்துக் கொண்டே, எப்பொழுதும் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் அவர்கள் மட்டுமே என்று அழுத்தமாக கூறிய விஜயை, அவருடைய ரசிகர்களால் இன்னும் அதிகம் நேசிக்க வைத்தது.