14 வயசில் திருமணம்.. 2 வருடத்தில் முடிவுக்கு வந்த வாழ்க்கை! அங்காடி தெரு சிந்துவுக்கு இவ்வளவு கஷ்டங்களா?

Published : Aug 07, 2023, 03:48 PM ISTUpdated : Aug 07, 2023, 05:03 PM IST

'அங்காடி தெரு' படத்தின் மூலம் பிரபலமான நடிகை சிந்து, இன்று அதிகாலை 2.15 மணியளவில் புற்றுநோயால் உயிரிழந்த நிலையில்... இவரின் வலி நிறைந்த வாழ்க்கை பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.  

PREV
17
14 வயசில் திருமணம்.. 2 வருடத்தில் முடிவுக்கு வந்த வாழ்க்கை! அங்காடி தெரு சிந்துவுக்கு இவ்வளவு கஷ்டங்களா?

சிந்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பல வருடங்களாக திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து வந்தாலும், இவருக்கென அடையாளத்தை ஏற்படுத்திய திரைப்படம் 'அங்காடி தெரு'. இந்த படத்தில் விபச்சார பெண்ணாக சிந்து நடித்திருந்த நிலையில், இவரை குள்ளமாக இருக்கும் கணேசன் என்பவர் திருமணம் செய்து கொள்வார். இவர்கள் இருவருக்கும் பிறக்கும் குழந்தை, எந்த குறையும் இல்லாமல் பிறக்க வேண்டும் என நினைத்தாலும்... கணேசன் போலவே குள்ளமாக பிறப்பதால், இது பற்றி எமோஷனலாக ஒருவரிடம் சிந்து எமோஷ்னலாகபேசிய வசனங்கள் அதிகம் கவனிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரை பலரும் 'அங்காடி தெரு' சிந்து என்றே அழைக்கத் தொடங்கினர்.

27

இந்த படத்திற்கு பின்னர், அடுத்தடுத்து பல படங்களிலும், சீரியல்களிலும், சிந்து பிஸியாக நடித்து வந்த நிலையில்... நலிந்த கலைஞர்களுக்கும், கொரோனா காலத்தில் சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் அவதிப்பட்ட பலருக்கு தன்னால் முடிந்த உதவிகளை சின்னத்திரை நடிகர்கள் சங்கம் மூலமாகவும், நேரடியாகவும் சென்று  செய்து வந்தார்.

10 நாள்ல செத்துருவனு சாபம் விட்ட உறவினர்கள்... மறைவுக்கு முன் அங்காடி தெரு சிந்து அளித்த எமோஷனல் பேட்டி
 

37

இந்நிலையில் இவர் கடந்த நான்கு ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார். இவருடைய கையில் இருந்த பணம் மற்றும் சேமிப்பு அனைத்தும் புற்றுநோய் சிகிச்சைக்கு கரைந்து போனது. எனவே தன்னுடைய மருத்துவ சிகிச்சைக்கு வசதி படைத்த நடிகர்கள் உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.  ஒரு சில நடிகர்கள் இவருக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்த நிலையில், இதன் மூலம் ஏற்கனவே அங்காடி தெரு சிந்துவின் ஒரு பக்க மார்பகம் அகற்றப்பட்ட நிலையில், சமீபத்தில் தன்னுடைய இரண்டாவது மார்பகத்திலும் புற்றுநோய் தீவிரமாக பரவி விட்டதாக கூறி அதனை அகற்றுவதற்கு நிறைவு செலவாகும், அதற்க்கு விஷால், தனுஷ் போன்றவர்கள் உதவ வேண்டும் என தெரிவித்திருந்தார்.
 

47

இவர் கடைசியாக கொடுத்த பேட்டியில் கூட தினமும் பாத்ரூமுக்கு கூட எழுந்து செல்வது மிகவும் கடினமாக இருக்கிறது. உடல் முழுவதும் வலி தாங்க முடியவில்லை. அதனால் ஒவ்வொரு நாளும் கடவுளிடம் என்னை எடுத்துக்கோ... இல்ல நிம்மதியா வாழ விடு என்று தான் வேண்டிக் கொள்கிறேன் என பேசி பேசி இருந்தார். மேலும் அவசரத்திற்கு பணம் வாங்கியவர்கள் அசிங்கப்படுத்துவதாகவும், மருத்துவ செலவுக்கு அதிக பணம் செலவாவதால் நான் உயிருடன் இருப்பதை விட இறந்து விடலாம் என கூறியது.. பலரது மனதையும் கலங்க வைத்தது.

பிக்பாஸ் வரலாற்றில் முதன்முறையாக... இந்த சீசனில் ஒன்னில்ல 2 வீடு - ஆனா அதுல ஒரு டுவிஸ்ட் இருக்கு!
 

57

இவரின் மரணத்தில் தான் இவ்வளவு கஷ்டங்கள்... வலிகள் என்றால் இவரின் திருமண வாழ்க்கையும் வேதனை நிறைந்தது தான். சிறு வயதிலேயே சிந்துவின் அம்மா இறந்து விட்டதால், ஒரு கட்டத்தில் சிந்துவை பாதுகாப்பது கஷ்டம் என நினைத்து 14 வயதிலேயே அவருக்கு உறவினர் ஒருவரை திருமணம் செய்து வைத்துள்ளார். கணவர் என்னேரமும் குடியிலேயே இருந்துள்ளார். 15 வயதிலேயே ஒரு குழந்தையை பெற்றுக் கொண்டு, கணவரிடம் அடியும் உதையும் தாங்க முடியாமல் அப்பா வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் தன்னுடைய மகளை காப்பாற்றுவதற்காக அக்கம் பக்கத்தில் கிடைத்த வேலைகளை எல்லாம் செய்துள்ளார். அதைப்போல் ஹோட்டல் வேலை,  சித்தாள் போன்ற வேலைகளையும் செய்து வந்துள்ளார்.
 

67

பின்னர் சிறுவயதில் இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளதால், தெரிந்தவர்கள் மூலம்  திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்துள்ளது. அதில் அங்காடித் தெரு தான் இவரை பிரபலமாக்கியது.  தன்னுடைய வாழ்க்கை தான் நாசமாகிவிட்டது என நினைத்த சிந்து மகளை நல்ல இடத்தில் திருமணம் செய்து வைக்க நினைத்தார்.

பாடகி சின்மயி மகன்களுடன் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு நடிகை சமந்தா போட்ட கியூட் டான்ஸ் - வைரலாகும் வீடியோ

77

மகளை ஃபேஷன் டிசைனிங் படிக்க வைத்துள்ள சிந்து, மகளுக்கு நல்லபடியாக திருமணம் செய்து வைத்த நிலையில், இவரின் மருமகன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடந்த விபத்தில் உயிரிழந்தார். எனவே தற்போது சிந்து தான், இவரின் மகள் மற்றும் பேத்தியை கவனித்து வந்தார். இவர் கொடுத்த ஒவ்வொரு பேட்டியிலும் தன்னை பற்றி கவலை பட்டத்தை விட, மகளை பற்றி அதிகம் கவலை பட்டர். தொடர்ந்து வலிகளை மட்டுமே சுமந்து கொண்டு வாழ்ந்த சிந்து, இன்று அதிகாலை உயிரிழந்த நிலையில், பலர் இவருக்கு நேரடியாக சென்று தங்களின் அஞ்சலியை செலுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!

Recommended Stories