ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10-ந் தேதி திரைக்கு வர உள்ளது. அப்படத்திற்கான முன்பதிவுகளும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே அண்மையில் நடைபெற்ற ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவும் நிறைய அனல் பறக்கு பேச்சுகளுடன் நடந்து முடிந்தது. இதில் சன் பிக்சர்ஸ் நிறுவனர் கலாநிதி மாறன், ரஜினிகாந்த் பற்றி பேசுகையில், அவர் ரெக்கார்ட் பிரேக்கர் அல்ல ரெக்கார்ட் மேக்கர் என கூறி இருந்தார். அப்படி ரஜினி படங்கள் படைத்த டக்கரான சாதனைகள் பற்றி பார்க்கலாம்.