10 நாள்ல செத்துருவனு சாபம் விட்ட உறவினர்கள்... மறைவுக்கு முன் அங்காடி தெரு சிந்து அளித்த எமோஷனல் பேட்டி

First Published | Aug 7, 2023, 10:04 AM IST

மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகை அங்காடி தெரு சிந்து மரணமடைந்துள்ள நிலையில், அவர் அளித்த கடைசி பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.

வசந்த பாலன் இயக்கிய அங்காடித் தெரு படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை சிந்து இன்று அதிகாலை 2.15 மணியளவில் மரணமடைந்தார். மார்பக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள சம்பவம் திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், 10 நாள்ல செத்துருவனு உறவினர் ஒருவர் தனக்கு சாபம் விட்டதாக கடைசியாக அளித்த பேட்டி ஒன்றில் கூறிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அதில் அவர் பேசியதாவது : “என்னை எடுத்துக்கோ, இல்லை நிம்மதியாக வாழவிடு என்று தான் கடவுளிடம் தினமும் கேட்கிறேன். தினம் தினம் சித்ரவதையை அனுபவித்துக் கொண்டு இருக்கிறேன். நான் கஷ்டப்படுவது மட்டுமின்றி என் கூட இருப்பவர்களையும் கஷ்டப்படுத்திக் கொண்டு இருக்கிறேன். கேன்சருக்கு மருந்தே கிடையாது. சரியாகிருக்குனு சொல்றது எல்லாமே ஒரு கண் துடைப்பு தான். 


கொரோனா காலகட்டத்தில் நான் மக்கள் பணியில் இருந்தேன். அப்போது மார்பகத்தில் கட்டி வந்தது. அதை டாக்டரிடம் காட்டியபோது, அது வெறும் நீர்கட்டி என்று சொல்லிவிட்டார்கள். இதனால் நானும் பெருசா கண்டுகொள்ளவில்லை. பின்னர் போகப்போக அந்த கட்டி பரவ ஆரம்பித்தது. நான் பயாப்சி செஞ்சது தான் பெரிய தப்பு. அதுக்கு அப்புறம் தான் இந்த கட்டிகள் பரவ ஆரம்பித்தன. பின்னர் மேலும் பரவாமல் இருக்கு ஒருபக்க மார்பை கசப்பு கடையில் அறுப்பது போல் அறுத்து எடுத்துவிட்டனர்.

இதையும் படியுங்கள்... தவமிருந்து பெற்ற மகளுக்கு இதயத்தில் 2 ஓட்டை.. பிறந்த 3 மாதத்திலேயே ஓபன் ஹார்ட் சர்ஜரி - விஜய் பட நடிகை கண்ணீர்

சினிமாவில் நடிச்ச காசையெல்லாம் பிறருக்கு உதவி செஞ்சிட்டேன். ஆனால் இப்போ எனக்கு பிரச்சனைனு சொல்லும் போது சொந்தக்காரங்க யாரும் உதவ முன்வரல. அவசரத்துக்கு பணம் வாங்கிவிட்டு தர லேட் ஆனால் அசிங்கப்படுத்துகிறார்கள். ஒரு மாசத்துக்கு முன்னாடி கூட என்னுடைய அக்கா மகள் வந்து சாபம் விட்டுட்டு போனா. இப்போ கேன்சர் தான வந்திருக்கு, இன்னும் அடுத்தடுத்து நிறைய நோய்கள் வரும், பத்து நாள்ல நீ செத்துடுவனு சாபம் விட்டா. 

ஒரு கையில் சுத்தமாக உணர்ச்சியே இல்லை. கஞ்சி தவிர வேறு எந்த உணவும் சாப்பிடக்கூடாதுனு சொல்லிட்டாங்க. பத்து நாளைக்கு தேவைப்படும் மாத்திரை வாங்கவே 6500 ரூபா செலவாகுது. இப்படி ஒரு நிலைமையில் உயிர் வாழ்வதைவிட சாவதே மேல்னு தோணுது. இன்னொரு மார்பிலும் புற்றுநோய் பரவிவிட்டது. அதை அகற்ற சிகிச்சைக்கு என்னிடம் பணமில்லை என கண்ணீர்மல்க அதில் பேசி இருந்தார் சிந்து.

இதையும் படியுங்கள்... மார்பக புற்றுநோய்... சிகிச்சைக்கு பணமின்றி தவித்த நடிகை அங்காடித் தெரு சிந்து காலமானார்

Latest Videos

click me!