பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பிபாசா பாசு. இவர் தமிழிலும் விஜய்யுடன் சச்சின் படத்தில் நடித்து பிரபலமானார். நடிகை பிபாசா பாசுவுக்கு கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர் நடிகர் கரண் சிங் குரோவர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்னர் பெரியளவில் பட வாய்ப்புகள் கிடைக்காததால் சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டார்.
திருமணமாகி 6 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்த இந்த தம்பதிக்கு கடந்தாண்டு நவம்பர் மாதம் தான் ஒரு பெண் குழந்தை பிறந்தது. தவமிருந்து பெற்ற அந்த குழந்தைக்கு தேவி என பெயரி சூட்டினர். இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது மகளுக்கு ஏற்பட்ட உடல்நலப்பிரச்சனைகள் குறித்து பேசுகையில் கண்ணீர்விட்டு கதறி அழுதுள்ளார் பிபாசா பாசு. அப்படி அவரது குழந்தைக்கு என்ன ஆனது என்பதை பற்றி பார்க்கலாம்.
இதையும் படியுங்கள்... மார்பக புற்றுநோய்... சிகிச்சைக்கு பணமின்றி தவித்த நடிகை அங்காடித் தெரு சிந்து காலமானார்
இதுகுறித்து நடிகை பிபாசா கூறியதாவது : ” என் மகள் தேவிக்கு பிறக்கும் போதே இதயத்தில் 2 ஓட்டை இருந்தது. பின்னர் அந்த ஓட்டை தானாக சரியாகிறதா என்பதை கண்டறிய மருத்துவர்கள் அடிக்கடி ஸ்கேன் எடுத்துப் பார்த்தனர். ஆனால் அந்த ஓட்டை பெரிதாக இருந்ததால் அது தானாக சரியாகவில்லை. இதனால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் சொன்னார்கள். அதுவும் ஓப்பன் ஹார்ட் சர்ஜரி செய்யனும்னு சொன்னாங்க.
மூன்று மாத குழந்தைக்கு ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்வது ரிஸ்க் ஆனது தான் இருந்தாலும், அவளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அதற்கு சம்மதம் தெரிவித்தேன். 6 மணிநேரம் ஆபரேஷன் தியேட்டர் முன் நின்றுகொண்டிருந்தேன். அந்நேரம் என் வாழ்க்கையே நின்றுவிட்டது போல இருந்தது. பின்னர் ஒருவழியாக ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்தது. தற்போது தேவி நலமாக உள்ளார்” என மகள் பற்றி நடிகை பிபாசா பாசு அளித்த எமோஷனல் பேட்டி வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... வாரிசு பட ஷூட்டிங்.. சூப்பர் ஸ்டார் பற்றி கேட்டறிந்த தளபதி விஜய் - பல உண்மைகளை உடைத்த பிரபலம்!