சில நிமிடங்களில் விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்... முன்பதிவில் மட்டும் இத்தனை கோடி வசூலா? மாஸ் காட்டும் ஜெயிலர்

First Published | Aug 6, 2023, 4:07 PM IST

ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படத்தின் முன்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதன் கலெக்‌ஷன் விவரம் வெளியாகி உள்ளது.

Jailer

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள மாஸ் திரைப்படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்துள்ள இப்படத்தில் ரஜினிகாந்த், முத்துவேல் பாண்டியன் என்கிற கேரக்டரில் நடித்துள்ளார். அவருடன் ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், ஷிவ ராஜ்குமார், தமன்னா, சுனில், யோகிபாபு, வஸந்த் ரவி, தமன்னா, மிர்ணா, விநாயகன், எதிர்நீச்சல் சீரியல் நடிகர் மாரிமுத்து என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

jailer

ஜெயிலர் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பி வருகிறது. ஜெயிலர் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 10-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது. அப்படத்தின் ரிலீசுக்கு நான்கு நாட்களே இருக்கும் நிலையில், தற்போது அப்படத்திற்கான புரமோஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இதையும் படியுங்கள்... சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன பருந்து, காக்கா கதைக்கு அர்த்தம் இதுதானா?.. பற்ற வைத்த புளூ சட்டை மாறன்!

Tap to resize

jailer

இந்நிலையில், ஜெயிலர் திரைப்படத்திற்கான முன்பதிவு இன்று தமிழகத்தில் தொடங்கியது. தொடங்கிய வேகத்தில் ஏராளமான இடங்களில் சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்தன. பெரும்பாலான இடங்களில் முதல் நாள் முழுவதும் ஹவுஸ்புல் ஆகியதாக கூறப்படுகிறது. இதனால் தமிழகத்தில் முதல்நாளில் அதிக வசூல் ஈட்டும் படமாக ஜெயிலர் இருக்கும் எனவும் திரையுலக வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

அதுமட்டுமின்றி வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் ஏற்கனவே முன்பதிவு தொடங்கிவிட்ட நிலையில், அங்கும் ஜெயிலர் திரைப்படம் மாஸ் காட்டி வருகிறது. குறிப்பாக கர்நாடகாவில் முதல்நாளுக்கான 95 சதவீத டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதுவரை முன்பதிவின் மூலம் மட்டும் கர்நாடகாவில் ரூ.2 கோடிக்கு மேல் வசூல் வந்துள்ளதாம். 

அதேபோல் அமெரிக்காவில் ஜெயிலர் படத்திற்கான முன்பதிவு ஜெட் வேகத்தில் நடைபெற்று வருகிறது. அங்கு 6 லட்சம் டாலர்களுக்கும் அதிகமான தொகைக்கு டிக்கெட்டுகள் விற்பனை ஆகி உள்ளன. இது இந்திய மதிப்பில் 5 கோடி இருக்கும். அதேபோல் இங்கிலாந்திலும் 2 லட்சம் பவுண்ட் மதிப்பிலான டிக்கெட்டுகள் விற்பனை ஆகி இருக்கின்றன. இதன் மதிப்பு சுமார் 2 கோடிக்கு மேல் இருக்கும். இதுதவிர கனடாவிலும் 1 லட்சம் டாலர்கள் மதிப்பிலான டிக்கெட் விற்பனை ஆகி இருக்கின்றன். இதன்மூலம் தமிழ்நாடு தவிர்த்தே தற்போது முன்பதிவு மூலம் சுமார் 10 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி உள்ளது ஜெயிலர் படம். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... பிகினியை மிஞ்சும் ஏடாகூடமான உடையில் போட்டோஷூட் நடத்தி.. ரசிகர்களை கவர்ச்சி வலையில் சிக்க வைத்த ரம்யா பாண்டியன்

Latest Videos

click me!