பிகினியை மிஞ்சும் ஏடாகூடமான உடையில் போட்டோஷூட் நடத்தி.. ரசிகர்களை கவர்ச்சி வலையில் சிக்க வைத்த ரம்யா பாண்டியன்

First Published | Aug 6, 2023, 3:35 PM IST

கருப்பு நிற ஆடையில் கவர்ச்சியில் உச்சம் தொட்ட நடிகை ரம்யா பாண்டியனின் கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் படு வைரல் ஆகி வருகின்றன.

ramya pandian

ஒரே ஒரு போட்டோஷூட் மூலம் ஓவர் நைட்டில் பேமஸ் ஆனவர் தான் ரம்யா பாண்டியன். கடந்த 2018-ம் ஆண்டு இவர் நடத்திய மொட்டைமாடி போட்டோஷூட்டை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. சேலையில், இடுப்பழகு தெரிய ரம்யா பாண்டியன் நடத்திய அந்த மொட்டைமாடி போட்டோஷூட் தான் அவரை பாப்புலர் ஆக்கியது. அதன்பின்னர் சினிமாவில் வாய்ப்பு வராவிட்டாலும் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார் ரம்யா.

அந்த வகையில், அவர் முதன்முதலில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கி இறுதிப்போட்டி வரை சென்றார். அதன்பின்னர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்ற ரம்யா பாண்டியனுக்கு அடுத்ததாக கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் பிக்பாஸ் நிகழ்ச்சி. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய அந்நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு பைனல் வரை முன்னேறி நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டார்.

இதையும் படியுங்கள்... ரஜினி நடித்து 200 நாட்களுக்கு மேல் ஓடிய படங்கள் இத்தனையா?.. சூப்பர்ஸ்டாரின் இந்த சாதனையை முறியடிக்கவே முடியாது

Tap to resize

ramya pandian

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் நடிகர் சூர்யா தயாரிப்பில் இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் என்கிற கிராமத்து கதையம்சம் கொண்ட படத்தில் நடித்து அசத்திய ரம்யா பாண்டியனுக்கு, அடுத்தடுத்து எதிர்பார்த்த பட வாய்ப்புகள் கிடைக்காததால் தற்போது மீண்டும் போட்டோஷூட் பக்கம் தன் கவனத்தை திருப்பி இருக்கிறார். அவரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தான் தற்போது சோசியல் மீடியாவில் செம்ம டிரெண்டிங் ஆக உள்ளது.

ramya pandian

அதன்படி பிகினி போன்ற படுகவர்ச்சியான உள்ளாடை மட்டும் அணிந்து, அதன்மேல் கொசுவலை போன்ற மேலாடையை அணிந்திருக்கிறார். கருப்பு நிற ஆடையில் கவர்ச்சியில் உச்சம் தொட்டுள்ள ரம்யா பாண்டியனின் இந்த கிளாமர் அவதாரத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள், என்ன சிம்ரன் இதெல்லாம் என கமெண்ட் செய்து வருகின்றனர். ஒரு சிலரோ தமிழ்நாட்டின் மியா கலீபா என்றெல்லாம் ரம்யா பாண்டியனை ஒப்பிட்டு வருகின்றனர். ரம்யாவின் இந்த கிளாமர் கிளிக்ஸிற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளன.

இதையும் படியுங்கள்... பிறந்தநாள் முடிந்ததும் பிகினி பேபியாக மாறி... ரசிகர்களுக்கு கவர்ச்சி ட்ரீட் வைத்த மாளவிகா மோகனன்

Latest Videos

click me!