தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் தற்போது கேப்டன் மில்லர் திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. வருகிற டிசம்பர் மாதம் இப்படம் திரைக்கு வர உள்ளது. இதையடுத்து தனுஷ் தனது 50-வது படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் ஹீரோவாகவும் தனுஷ் நடித்து வருகின்றார்.
25
இதுதவிர மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், தெலுங்கில் சேகர் கம்முலா இயக்கத்தில் ஒருபடம், இந்தியில் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ராஞ்சனா 2 என பான் இந்தியா அளவில் செம்ம பிசியான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார் தனுஷ். இவ்வளவு பிசியான நடிகராக இருக்கும் தனுஷ், தற்போது ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் குறித்து போட்டுள்ள டுவிட்டர் பதிவு செம்ம வைரல் ஆகி வருகிறது.
35
அந்த பதிவில், இது ஜெயிலர் வாரம் என குறிப்பிட்டு சிரிக்கும் எமோஜிக்களை பதிவிட்டுள்ளார் தனுஷ். ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்துகொண்ட தனுஷ், அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்தாண்டு அவரை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டாலும், தனது முன்னாள் மாமனார் ரஜினி மீது அவர் வைத்துள்ள பாசம் இன்னும் குறையவில்லை என்பதற்கு இதுவே சான்று என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
அதுமட்டுமின்றி தனுஷ், ரஜினிகாந்தின் தீவிர ரசிகரும் கூட, இதற்கு முன் ரஜினி நடிப்பில் வெளிவந்த லிங்கா, காலா, கபாலி போன்ற படங்களை எல்லாம் பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ பார்த்துள்ள அவர், தற்போது ஜெயிலர் படத்திற்கு அதேபோல் முதல் நாள் முதல் காட்சி பார்க்க உள்ளதை தான் இப்படி தனது டுவிட்டின் மூலம் வெளிப்படுத்தி உள்ளார் என கூறப்படுகிறது.
55
ரஜினியின் ஜெயிலர் படத்தை தொடர்ந்து அப்படத்தின் இயக்குனர் நெல்சன் இயக்க உள்ள படத்தில் தனுஷ் நாயகனாக நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.