Published : Aug 01, 2024, 03:13 PM ISTUpdated : Aug 01, 2024, 03:43 PM IST
நடிகை ஜெனிலியா, பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களின் அன்சீன் என்கேஜ்மென்ட் போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
மும்பையில் பிறந்து வளர்ந்த நடிகை ஜெனிலியா டிஸோசா, கடந்த 2003 -ஆம் ஆண்டு Tujhe Meri Kasam என்கிற திரைப்படத்தில் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கிற்கு ஜோடியாக அறிமுகமானார். இப்படம் ரித்தேஷ் தேஷ்முக்கிற்க்கும் அறிமுக படமாக அமைந்தது.
29
Genelia and Riteish Deshmukh Love:
முதல் படத்திலேயே ஜெனிலியா மற்றும் ரித்தேஷ் தேஷ்முக் இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு, பின்னர் காதலாக மாறியது. இருவருமே அடுத்தடுத்து தங்களின் திரையுலக வளர்ச்சியில் கவனம் செலுத்தி வந்தாலும், காதலிலும் உறுதியாக இருந்தனர்.
ரித்தேஷ் தேஷ்முக், ஹிந்தி மற்றும் மராத்தி ஆகிய இரு மொழிகளில் மட்டுமே கவனம் செலுத்திய நிலையில், ஜெனிலியா தென்னிந்திய மொழி படங்களில் நடிக்க தொடங்கினார். அதன்படி 2003 ஆம் ஆண்டு, இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான 'பாய்ஸ்' திரைப்படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்து ஜெனிலியே அதை ஆண்டு தெலுங்கிலும் 'சத்தியம்' என்கிற படத்தில் அறிமுகமானார்.
49
Genelia South Indian Movies:
இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, போன்ற மொழி படங்களில் நடிக்க நடித்துள்ள ஜெலினியா... தமிழில் விஜய்க்கு ஜோடியாக சச்சின், ஜெயம் ரவிக்கு ஜோடியாக சந்தோஷ் சுப்ரமணியம், தனுசுக்கு ஜோடியாக உத்தமபுத்திரன் போன்ற ஹிட் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்தார்.
பிஸியாக நடித்து கொண்டிருக்கும் போதே, தன்னுடைய 9 வருட காதலனான ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்து கொண்டார். அதன்படி இவர்களின் திருமணம் 2012-ஆம் ஆண்டு நடைபெற்றது. ரித்தேஷ் தேஷ்முக் தந்தை விலஸ்ராவ் தேஷ்முக் முன்னால் முதலமைச்சர் என்பதால் இவர்களின் திருமணம் பாலிவுட் மற்றும் அரசியல் தலைவர்கள் வியக்கும் வகையில் நடந்தது.
69
Genelia Quit Cinema:
திருமணத்திற்கு பின்னர் முழுமையாக திரையுலகில் இருந்து விலகிய ஜெனிலியா, இரண்டு ஆண் குழந்தைகளுக்கு அம்மாவாகவும், சிறப்பான குடும்ப தலைவியாகவும் இருந்து வருகிறார்.
அவ்வபோது சில கேமியோ ரோல்களில் தலை காட்டி வந்த ஜெனிலியா நீண்ட இடைவெளிக்கு பின்னர் கன்னடம் மற்றும் தெலுங்கில் உருவாகும் ஜூனியர் என்கிற படத்தில் நடித்துள்ளார்.
89
Genelia and Riteish Deshmukh Unseen Photos:
அடுத்த இன்னிங்சுக்கு தயாராகி உள்ள ஜெனிலியாவும் Unseen நிச்சயதார்த்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதில் மிகவும் எளிமையாக பிளாக் மற்றும் கோல்டன் நிற எம்ப்ராய்டரி தரித்த சோலி உடையில் உள்ளர் ஜெனிலியா. ரித்தேஷ் தேஷ்முக்கும் மிகவும் எளிமையான ஷர்வானி உடையில் உள்ளார்.
99
Genelia and Riteish Deshmukh Viral photos
பார்ப்பவர்கள் கண் படும் அழகில் இருவரும் தங்கள் குடும்பத்தோடு இருக்கும் போட்டோஸ்... வைரலாக பார்க்கப்பட்டு, லைக்குகளை குவித்து வருகிறது.