
பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்த டிராகன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடி வசூலை கடந்து சாதனை படைத்துள்ளது. டிராகனுக்கு முன் இந்த இமாலய வசூல் சாதனையை எட்டிய படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் ஹீரோவாக நடித்து இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆன படம் கேம் சேஞ்சர். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.178 கோடி வசூலித்தது. இந்த ஆண்டின் முதல் 100 கோடி வசூல் திரைப்படம் கேம் சேஞ்சர் தான். இப்படம் 178 கோடி வசூலித்தும் படுதோல்வியை சந்தித்தது.
தெலுங்கில் வெங்கடேஷ் நடிப்பில் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆன படம் சங்கராந்திக்கு வஸ்துன்னாம். இப்படத்தை அனில் ரவிபுடி இயக்கி இருந்தார். இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாட்சி செளத்ரி ஆகியோர் ஹீரோயினாக நடித்திருந்தனர். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.312 கோடி வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.
தெலுங்கில் ரவீந்திரா இயக்கத்தில் பாலகிருஷ்ணா ஹீரோவாக நடித்த படம் டாக்கு மகாராஜ். இப்படத்தில் ஊர்வசி ரவுதுலா, பாபி தியோல் என பாலிவுட் நடிகர்களும் நடித்திருந்தார்கள். ஜனவரி மாதம் திரைக்கு வந்து மாபெரும் வரவேற்பை பெற்ற இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.165.5 கோடி வசூலித்திருந்தது.
பாலிவுட்டில் அபிஷேக் அனில் கபூர், சந்தீப் கெவ்லானி இயக்கத்தில் அக்ஷய் குமார் ஹீரோவாக நடித்த படம் ஸ்கை ஃபோர்ஸ். இப்படம் கடந்த ஜனவரி 24ந் தேதி குடியரசு தினத்தன்று ரிலீஸ் ஆன நிலையில், பாக்ஸ் ஆபிஸில் ரூ.167.1 கோடி வசூலித்து வெற்றி பெற்றது.
இதையும் படியுங்கள்.. 2025-ல் மாஸ் ஹிட் அடித்த டாப் 3 தமிழ் படங்களுக்குள் இப்படி ஒரு ஒற்றுமையா?
ஜனவரி மாதம் நான்கு 100 கோடி வசூல் படங்கள் வந்த நிலையில், பிப்ரவரியில் அந்த வசூலை எட்டிய முதல் படம் நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான விடாமுயற்சி தான். மகிழ் திருமேனி இயக்கிய இப்படம் கடந்த பிப்ரவரி 6ந் தேதி திரைக்கு வந்தது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.138.2 கோடி வசூலித்தது.
விடாமுயற்சி படத்துக்கு போட்டியாக பிப்ரவரி 7ந் தேதி ரிலீஸ் ஆன தண்டேல் படமும் 100 கோடி கிளப்பில் இணைந்தது. நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் வெளியான இப்படம் மீனவர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 105 கோடி வசூலித்து இருந்தது.
இந்திய சினிமாவில் இந்த ஆண்டு மாபெரும் வெற்றியை ருசித்த படம் என்றால் அது சாவா தான். இந்திப்படமான இதில் விக்கி கெளஷல் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்த இப்படம் கடந்த பிப்ரவரி 14ந் தேதி காதலர் தினத்தன்று ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிஸில் ரூ.600 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றிநடை போட்டு வருகிறது.
100 கோடி கிளப்பில் லேட்டஸ்டாக இணைந்துள்ள படம் டிராகன். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்கி உள்ளார். இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவகவும், கயாடு லோகர் மற்றும் அனுபமா ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.102 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டி வருகிறது. இதுவரை பிரதீப் 2 படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். அந்த 2 படங்களுமே ரூ.100 கோடி வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்..பிரதீப் ரங்கநாதனின் லவ் இன்ஸூரன்ஸ் கம்பெனி படத்தின் கதை இதுதானாம்!