இந்திய சினிமாவில் ‘ஐட்டம் சாங்’ என்னும் ஒரு கான்சப்ட் சில பல வருடங்களுக்கு முன்பு அறிமுகம் ஆனது. அதாவது படத்தின் ஹீரோயினாக ஒருவர் இருப்பார், என்னதான் அவர் சூப்பராக நடித்தாலும், ஒரு பாடலுக்காவது கவர்ச்சியாக ஆட்டம் ஆடவில்லையென்றால் அப்படம் போணியாகாத நிலை இருந்தது. இதனால் படத்தின் இரண்டாம் பாகத்தில், கிளைமேக்ஸ் நெருங்கும் வேளையில் இப்படியொரு ஐட்டம் சாங்கினை வைத்து ரசிகர்களை பெப் ஏற்றுவார்கள். அப்படி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகள் சிலர் ஐட்டம் சாங்கிற்கு குத்தாட்டம் போட்டுள்ளனர். அவர்களைப் பற்றி தற்போது பார்க்கலாம்.
கிரண்
விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமான கிரண். அடுத்தடுத்து கமல், பிரசாந்த், விஜயகாந்த் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்தாலும், இடைஇடையே ஐட்டம் டான்ஸும் ஆடி வந்தார். அந்தவகையில் திருமலை படத்தில் இடம்பெறும் வாடியம்மா ஜக்கம்மா, சரத்குமாரின் அரசு படத்தில் இடம்பெறும் ‘ஆளான தேகம் எங்கும்’, திமிரு படத்தில் வரும் ‘மானாமதுர’ என ஏராளமான ஹிட் பாடல்களில் குத்தாட்டம் போட்டுள்ளார்.
தமன்னா
படங்களிலேயே தாராளமாக கவர்ச்சி காட்டி நடித்து பாப்புலர் ஆன நடிகை தமன்னா, ஒருசில படங்களில் முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து ஐட்டம் டான்ஸும் ஆடி உள்ளார். அந்த வகையில் யாஷ் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான கே.ஜி.எஃப் படத்தின் முதல் பாகத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போட்டார் தமன்னா. இதேபோல் தெலுங்கிலும் மகேஷ் பாபுவின் சரிலேரு நீகேவாரு படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்த இவர் தமிழில் இதுவரை ஐட்டம் டான்ஸ் ஆடியதில்லை.
சமந்தா
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா சமீபகாலமாக கவர்ச்சிக்கு டபுள் ஓகே சொல்லி வருகிறார். பல்வேறு படங்களில் ஹீரோயினாக கலக்கி வந்த சமந்தா, கடந்த ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா படத்தில் இடம்பெறும் ஊ சொல்றியா மாமா என்கிற பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆடி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். இப்பாடலுக்காக அவர் ரூ.5 கோடி வரை சம்பளமாக பெற்றதாக சொல்லப்படுகிறது. இப்படம் ஹிட் ஆக இவரது ஐட்டம் டான்ஸும் ஒரு காரணம் என்றே சொல்லலாம்.
இதையும் படியுங்கள்... இதுவும் போச்சா... சொந்த படமும் சொதப்பியதால் சோகத்தில் கீர்த்தி சுரேஷ் - இனி உதயநிதி தான் காப்பாத்தனும்!
ரெஜினா
வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் ரெஜினா, ஐட்டம் டான்ஸ் ஆடியது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இவர் அண்மையில் சிரஞ்சீவி, ராம்சரண் நடிப்பில் வெளியான ஆச்சார்யா படத்திற்காக ஒரு பாடலுக்கு மட்டும் படு கவர்ச்சியாக நடனம் ஆடி இருந்தார்.
பூஜா ஹெக்டே
கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என பல்வேறு திரையுலகில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வரும் நடிகை பூஜா ஹெக்டே, முன்னணி நடிகையாக இருந்தபோதும் அவ்வப்போது ஐட்டம் டான்ஸ் ஆடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார். முன்னதாக ரங்கஸ்தலம் படத்தில் ஆடி இருந்த அவர், சமீபத்தில் வெளியான எஃப்3 எனும் தெலுங்கு படத்தில் கவர்ச்சி நடனம் ஆடி ரசிகர்களை கவர்ந்தார்.