Harish Kalyan : சைலன்டாக நடக்கும் திருமண வேலைகள்... நடிகர் ஹரீஷ் கல்யாணுக்கு விரைவில் டும்டும்டும்?

Published : Jun 27, 2022, 08:23 AM IST

Harish Kalyan : அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருவதால், கோலிவுட்டில் பிசியான நடிகராக வலம் வருகிறார் ஹரீஷ் கல்யாண்.

PREV
14
Harish Kalyan : சைலன்டாக நடக்கும் திருமண வேலைகள்... நடிகர் ஹரீஷ் கல்யாணுக்கு விரைவில் டும்டும்டும்?

சிந்து சமவெளி படம் மூலம் நடிகராக அறிமுகமான ஹரீஷ் கல்யாணுக்கு ஆரம்ப காலத்தில் அவர் நடித்த படங்கள் வெற்றியைப் பெறவில்லை. இதையடுத்து கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் வைல்டு கார்டு போட்டியாளராக பங்கேற்று, இறுதிப்போட்டி வரை முன்னேறினார். இந்நிகழ்ச்சி அவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்றே சொல்லலாம்.

இதையும் படியுங்கள்... இதுவும் போச்சா... சொந்த படமும் சொதப்பியதால் சோகத்தில் கீர்த்தி சுரேஷ் - இனி உதயநிதி தான் காப்பாத்தனும்!

24

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அவருக்கு பட வாய்ப்புகளும் குவியத் தொடங்கின. அதன்பின் இவர் நடித்த பியார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், தாராள பிரபு, கசட தபற, ஓமணப்பெண்ணே ஆகிய படங்கள் அடுத்தடுத்து ஹிட் ஆனதால், தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார் ஹரீஷ் கல்யாண்.

இதையும் படியுங்கள்... Shivani : நாளுக்கு நாள் கூடும் கவர்ச்சி... ஷிவானியின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோ பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்

34

தற்போது சசி இயக்கத்தில் உருவாகி வரும் நூறு கோடி வானவில் என்கிற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் ஹரீஷ் கல்யாண், இதுதவிர பியார் பிரேமா காதல் பட இயக்குனர் இளன் இயக்கும் ஒரு படத்திலும் ஹீரோவாக நடிக்க கமிட் ஆகியுள்ளார். இவ்வாறு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருவதால், கோலிவுட்டில் பிசியான நடிகராக வலம் வருகிறார் ஹரீஷ் கல்யாண்.

இதையும் படியுங்கள்... 27 வருஷத்துக்கு பிறகும் அதே எனர்ஜி உடன் ‘சக்கு சக்கு வத்திகுச்சி’ பாடலுக்கு குத்தாட்டம் போட்ட மன்சூர் அலிகான்

44

இந்நிலையில், அவருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. அவரது பெற்றோரு அவருக்கு பெண் பார்த்து வருகிறார்களாம். அவரது திருமணம் அரேஞ் மேரேஜாக தான் இருக்கும் என கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

click me!

Recommended Stories