கதறி அழும் நந்தினி ! குணசேகரனுக்கு எதிராக திரும்பிய கதிர்.. செம்ம ட்விஸ்ட்! 'எதிர்நீச்சல்' அப்டேட்!

First Published | Aug 22, 2023, 3:12 PM IST

எதிர்நீச்சல் சீரியலில் இதுநாள் வரை, குணசேகரன் என்ன சொன்னாலும் அதனை கேட்டு மண்டையை ஆட்டிய கதிர், முதல் முறையாக குணசேகரனுக்கு எதிராக குரலை உயர்த்தி பேசும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
 

எதிர்நீச்சல் சீரியலில் கடந்த இரண்டு மாதமாக, கோமாவில் இருந்த அப்பத்தா கண் முழித்த நிலையில்... அவரை ஜீவானந்தத்துக்கு எதிராக புகார் கொடுக்க வேண்டும் என, குணசேகரன் வறுபுறுத்தினார். ஜீவானந்தத்தை நேரில் நான் பார்க்கணும் என அப்பத்தா அடம் பிடித்து, குணசேகரனின் எண்ணத்தை ஈடேற விடாமல் செய்து விட்டார்.

அப்பத்தாவுக்கு உதவ முன் வந்ததால், ஜீவானந்தம் தற்போது தன்னுடைய மனைவியை இழந்து நிற்கும் நிலையில்... குணசேகரனுக்கு எதிராக இவர் அடுத்து எப்படி காய் நகர்த்துவர் என்பது எதிர்பார்ப்பை தூண்டி உள்ளது. இந்நிலையில் தற்போது 'எதிர்நீச்சல்' சீரியலின் இன்றைய புரோமோ வெளியாகியுள்ளது.

நடிகருடன் காதல்... 4 அபார்ஷன்..! கள்ள காதலனுடன் ஓட்டம்.. 'ஜெயிலர்' பட நடிகை மிர்ணாவின் பகீர் பிளாஷ் பேக்!

Tap to resize

தன்னுடைய அண்ணன் குணசேகரனை தொடர்பு கொண்டு பேசும் கதிர், ஜனனி அங்கு வந்ததால்... எல்லாமே கெட்டு போய்டுச்சு என கூற, குணசேகரன் ஏன் அவ அங்கு வந்தா என கோவமாக போனில் பேசுகிறார். மற்றொரு புறம், ஜனனி மிகவும் பதட்டமாக காரில் வரும் காட்சி காட்டப்படுகிறது. 

ஒருவழியாக கதிர் வீட்டுக்கு வந்தவுடன், நந்தினி நீ பிணமா தான் வருவேன்னு உங்க அண்ணன் சொன்னாரு. இது உனக்கு, வலிக்குதான்னு தெரியல எனக்கு வலிக்குது என கூறுகிறார். இதுவரை குணசேகரன் எது சொன்னாலும் அதையே வேத வாக்காக எடுத்துக்கொண்ட கதிர், தன்னுடைய மனைவியின் ஆதங்கத்தை புரிந்து கொண்டு, ஏன் அப்படி சொன்னீங்க என குரலை உயர்த்தி பேச, குணசேகரன் மலைத்து போய் நிற்கிறார். எனவே இன்றைய எபிசோட் மீதான... எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த ஹிட் படத்தில் கார்த்திக்கு முன் நடிக்க வேண்டியது நான் தான்! 13 வருடத்திற்கு பின் விஷ்ணு விஷால் பீலிங்!

Latest Videos

click me!