தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, தற்போது குஷி பட புரமோஷனில் பிசியாக உள்ளார். அவர் நடிப்பில் உருவாகி இருக்கும் குஷி படத்தை சிவா நிர்வாணா இயக்கி உள்ளார். இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார் சமந்தா. இப்படம் வருகிற செப்டம்பர் 1-ந் தேதி திரைக்கு வர உள்ளது.
26
samantha ruth prabhu
குஷி படத்திற்கு பின்னர் நடிகை சமந்தா எந்த ஒரு படத்திலும் கமிட் ஆகவில்லை. அவருக்கு மயோசிடிஸ் நோய் பாதிப்பு இருப்பதால் அதற்காக சிகிச்சை பெறுவதற்காக சினிமாவில் இருந்து தற்காலிகமாக ஓய்வு பெற முடிவெடுத்துள்ளார் சமந்தா. குஷி பட ரிலீசுக்கு பின்னர் அதற்கான சிகிச்சையை மேற்கொள்ள உள்ளார்.
36
samantha photoshoot
சமீபத்தில் நடிகை சமந்தா அமெரிக்கா சென்றிருந்தார். அங்கு அவர் சிகிச்சை எடுக்க சென்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அவர் ஜாலியாக பொழுதை கழித்து வருகிறார். நேற்று நியூயார்க்கில் நடைபெற்ற 41-வது இந்திய தின அணிவகுப்பில் கலந்துகொண்டார் சமந்தா.
நடிகை சமந்தா, அங்கு வசிக்கும் இந்தியர்களோடு இந்திய தினத்தை கொண்டாடியதோடு மட்டுமின்றி, தன்னுடைய ரசிகர்களுடன் சாலையில் பேரணியாக சென்றார். அப்போது அவருடன் ஏராளமான ரசிகர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
56
samantha in new york
இந்நிலையில், தற்போது சேலையில் ஸ்டைலிஷ் தமிழச்சியாக மாறி, நியூயார்க் நகரில் அசத்தலான போட்டோஷூட் ஒன்றையும் நடத்தி இருக்கிறார் சமந்தா. இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியாகி படு வைரல் ஆகி வருகின்றன.
66
kushi movie actress samantha
சமந்தாவின் இந்த புகைப்படங்களை பார்த்த நடிகை சம்யுக்தா ஹெக்டே, மேடம் நான் என்னுடைய கண்களையும் இதயத்தையும் கொரியர் செய்து நியூயார்க்கிற்கு அனுப்புகிறேன். அதை எப்போதும் உங்களுடனே வைத்துக் கொள்ளுங்கள் என பதிவிட்டு தன் அன்பை வெளிப்படுத்தி உள்ளார்.