ஒரு பாட்டுக்கு 1 கோடி கேட்ட வெளிநாட்டு கம்பெனி; ஏ.ஆர்.ரகுமானை வைத்து பழிவாங்கிய மணிரத்னம்

Published : Aug 22, 2023, 11:03 AM ISTUpdated : Mar 18, 2025, 07:28 PM IST

இயக்குனர் மணிரத்னம் மற்றும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் காம்போவில் வெளிவந்த அலைபாயுதே படத்தின்போது நடந்த சுவாரஸ்ய சம்பவத்தை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
16
ஒரு பாட்டுக்கு 1 கோடி கேட்ட வெளிநாட்டு கம்பெனி; ஏ.ஆர்.ரகுமானை வைத்து பழிவாங்கிய மணிரத்னம்

AR Rahman Mani ratnam Alaipayuthey movie: தமிழ் சினிமாவில் பல்வேறு மாஸ்டர் பீஸ் படங்களை கொடுத்தவர் மணிரத்னம். அவர் படங்களுக்கு பக்கபலமாக இருப்பது ஏ.ஆர்.ரகுமானின் இசை தான். ரோஜா படத்தில் தொடங்கிய இந்த கூட்டணி கடைசியாக பொன்னியின் செல்வன் 2 வரை இணைந்து பணியாற்றியது. இவர்கள் இணைந்தால் அப்படத்தில் பாடல்களும் கன்பார்ம் ஹிட்டாகிவிடும்.

26
AR Rahman Alaipayuthey Music Secret

அப்படி மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி காலம் கடந்து கொண்டாடப்படும் படைப்புகளில் அலைபாயுதே படமும் ஒன்று. கடந்த 2000-ம் ஆண்டு வெளியான இப்படத்தின் மூலம் தான் நடிகர் மாதவன் தமிழ் திரையுலகில் நாயகனாக எண்ட்ரி கொடுத்தார். அவருக்கு ஜோடியாக நடிகை ஷாலினி நடித்திருந்தார். அவர் நடித்த கடைசி திரைப்படம் இதுவாகும்.

36
Maniratnam, AR Rahman movies

இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது ஏ.ஆர்.ரகுமானின் இசை தான். அப்பாடத்தின் பாடல்கள் எந்த அளவுக்கு கொண்டாடப்படுகிறதோ, அதே அளவு அப்படத்தின் பின்னணி இசையும் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக மாதவனின் எண்ட்ரி சீனுக்கு ஏ.ஆர்.ரகுமான் போட்ட என்றென்றும் புன்னகை என்கிற தீம் பாடலை ரசிக்காத ஆளே இருக்க முடியாது.

46
Maniratnam, AR Rahman flashback story

அந்த தீம் பாடலுக்கு பின்னணியில் தான் ஒரு தரமான சம்பவம் நடந்திருக்கிறது. அதாவது, மாதவனின் எண்ட்ரிக்காக முதலில் பேக்ஸ்டிரீட் பாய்ஸ் குழுவின் பாடலை பயன்படுத்த திட்டமிட்டு இருந்தாராம் மணிரத்னம். இதற்கான உரிமை கோரி வெளிநாட்டு மியூசிக் கம்பெனி ஒன்றை அணுகியபோது, அவர்கள் அந்த ஒரு பாடலை பயன்படுத்த ஒரு கோடி தர வேண்டும் என கேட்டார்களாம். இதனால் ஷாக் ஆன மணிரத்னம், வேண்டவே வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம்.

இதையும் படியுங்கள்... ஒரே படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர்.ரகுமான் - இளையராஜா! எல்லா பாட்டும் ஹிட்டு, அது என்ன படம்?

56
Maniratnam, AR Rahman Alaipayuthey music

பின்னர் ஏ.ஆர்.ரகுமானை வைத்து என்றென்றும் புன்னகை என்கிற மாஸ் பாடலை உருவாக்கி அதனை படத்தில் வைத்து வெற்றியும் கண்டார் மணிரத்னம். பின்னர் தான் இயக்கிய உயிரே படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த தக்க தைய தையா பாடலை இன்சைடு மேன் என்கிற ஹாலிவுட் படத்தில் பயன்படுத்த அதே மியூசிக் கம்பெனி அனுமதி கேட்டதாம். 

இதற்கு தைய தையா பாடலை இலவசமாக கொடுக்க அதன் இசை உரிமையை வைத்திருந்த நிறுவனம் முடிவெடுத்த நிலையில், இந்த தகவல் அறிந்த மணிரத்னம், ஒரு கோடி கொடுத்தால் தான் அதை தர முடியும் என டீல் பேசினாராம். இதற்கு அந்த வெளிநாட்டு மியூசிக் நிறுவனமும் ஒப்புக்கொண்டு ஒரு கோடி கொடுத்து அந்த பாடலை வாங்கிச் சென்றதாம். தனக்கு விபூதி அடிக்க பார்த்த நிறுவனத்திடம் டீல் பேசி ஒரு கோடி சம்பாதித்து கொடுத்த மணிரத்னம் தான், நிஜமாவே ஒரு ஜீனியஸ் தான் என ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.

66
AR Rahman

இப்படி வெளிநாட்டு மியூசிக் கம்பெனியையே கதறவிட்டுள்ள மணிரத்னம் - ஏ.ஆர்.ரகுமான் கூட்டணி அடுத்ததாக தக் லைஃப் என்கிற திரைப்படத்தில் பணியாற்றி வருகிறது. இப்படத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோர் நடிக்கின்றனர். இப்படம் வருகிற 2025ம் ஆண்டு ஜூன் மாதம் 5ந் தேதி திரைக்கு வர உள்ளது.

இதையும் படியுங்கள்... ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த இந்த மாஸ்டர் பீஸ் சாங்; இசைக்கருவிகளே இல்லாம கம்போஸ் செய்யப்பட்டதா?

Read more Photos on
click me!

Recommended Stories