கொடைக்கானல் மலை கிராம விவசாயிகள் கலந்துகொண்ட விவசாய கூட்டத்தில் பிரபல நடிகர்களான பிரகாஷ் ராஜ் மற்றும் பாபி சிம்ஹா குறித்து பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். நடிகர் பாபி சிம்ஹா அரசு விதிகளை மீறி 3 மாடி கட்டிடங்களை கட்டி வருவதாகவும், மலைகிராம விவசாயிகள் செல்லக்கூடிய சாலையை ஆக்கிரமிப்பு செய்து அந்த கட்டிடம் கட்டப்பட்டு வருவதாகவும், இதை எதிர்த்து கேட்கும் விவசாயிகளை ஒருமையில் பேசுவதாகவும் குற்றம் சாட்டினர்.
24
Prakash Raj
இதேபோன்று நடிகர் பிரகாஷ் ராஜ், அரசு அனுமதியை மீறி ஜேசிபி வாகனங்களை கொண்டு சாலை அமைத்து வருவதாக பேத்துப்பாறை ஊர்த்தலைவர் இந்த விவசாய கூட்டத்தில் குற்றம் சாட்டினார். இதனை அடுத்து அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோட்டாட்சியர் ராஜா தெரிவித்தார். அவர்களின் ஆக்கிரமித்து கட்டுவதால் அப்பகுதி விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
பேத்துப்பாறையில் 15 ஆண்டுகளாக சாலை வசதி இல்லாததால், சாலை அமைக்கக் கோரி கடந்த மே 1-ந் தேதி நடந்த கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினோம். அதன்பின்னர் தான் அந்தப் பகுதியில் சாலை அமைக்கின்றனர். ஆனால் அதற்கு பிரகாஷ் ராஜ் பணம் கொடுத்ததாக கூறுகின்றனர். இதில் முறைகேடு நடப்பது தெரிகிறது. அனுமதியின்றி தான் இதையெல்லாம் செய்து வருகிறார்கள், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
44
Bobby simha kodaikanal house issue
இப்படி கொடைக்கானலில் பிரகாஷ் ராஜ் மற்றும் பாபி சிம்ஹா இருவரும் சட்ட விரோதமாக சொகுசு பங்களா கட்டி வருவது இந்த விவசாயிகள் கூட்டத்தின் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதற்கு தகுந்த நடவடிக்கை எடுப்பதாக கோட்டாட்சியர் உறுதி அளித்துள்ளதால், அந்த இரு நடிகர்களுக்கும் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.