என்ன பழக்கம்-னா இது! ஒரேநாளில் கல்யாணம்; ஹாப்பியாக வெட்டிங் டே கொண்டாடிய சாந்தனு - பகத் பாசில்! வைரல் கிளிக்ஸ்

Published : Aug 22, 2023, 08:55 AM IST

பகத் பாசில் - நஸ்ரியா ஜோடியும், ஷாந்தனு - கீக்கி விஜய் ஜோடியும் ஒன்றாக சேர்ந்து தங்களது திருமண நாளை கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.

PREV
16
என்ன பழக்கம்-னா இது! ஒரேநாளில் கல்யாணம்; ஹாப்பியாக வெட்டிங் டே கொண்டாடிய சாந்தனு - பகத் பாசில்! வைரல் கிளிக்ஸ்
fahadh Faasil, Shanthnu

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் பகத் பாசில், தற்போது கோலிவுட், டோலிவுட் என மற்ற திரையுலகிலும் முக்கிய நடிகராக மாறி இருக்கிறார். இதற்கு காரணம் அவரின் வில்லன் அவதாரம் தான். அவர் வில்லனாக நடித்த விக்ரம், மாமன்னன், புஷ்பா போன்ற திரைப்படங்கள் வேறலெவலில் ஹிட் ஆனதால் பகத் பாசிலின் மார்க்கெட்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்துவிட்டது.

26
fahadh Faasil, Shanthnu wedding day celebration

பகத் பாசில் கடந்த 2014-ம் ஆண்டு நடிகை நஸ்ரியாவை திருமணம் செய்துகொண்டார். பெங்களூரு டேஸ் படத்தில் நடித்தபோது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. பின்னர் குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்ட இந்த ஜோடிக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

36
fahadh Faasil, Shanthnu wedding anniversary

இந்த நிலையில் நஸ்ரியா - பகத் பாசில் ஜோடி தங்களுடைய 9-வது திருமண நாளை கொண்டாடி உள்ளனர். அதுவும் நடிகர் சாந்தனு - அவரது மனைவி கீக்கி விஜய் ஆகியோருடன் சேர்ந்து கொண்டாடி இருக்கின்றனர். இதில் என்ன ஸ்பெஷல் என்றால் சாந்தனு - கீக்கி விஜய் ஜோடிக்கும் நேற்று தான் திருமண நாளாம்.

இதையும் படியுங்கள்... திடீரென தியேட்டருக்கு விசிட் அடித்து ஜெயிலர் பட டிக்கெட் விற்பனை செய்த ஜிவி பிரகாஷ் - காரணம் என்ன?

46
fahadh Faasil, Nazriya wedding anniversary

நடிகர் பாக்யராஜின் மகனான சாந்தனு கடந்த 2015-ம் ஆண்டு பிரபல தொகுப்பாளினியான கீக்கி விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களும் நஸ்ரியா - பகத் பாசில் ஜோடியும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் ஒன்றாக இணைந்து தங்களது வெட்டிங் டேவை கொண்டாடி இருக்கிறார்கள்.

56
Shanthnu, Kiki Vijay wedding anniversary

இவர்களது வெட்டிங் டே பார்ட்டியை ஹோஸ்ட் பண்ணியது இயக்குனர் ஏ.எல்.விஜய் தான். அவரோடு சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடியபோது எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் கீக்கி விஜய். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

66
Shanthnu, Kiki Vijay wedding day celebration

இதைப்பார்த்த ரசிகர்கள் என்ன பழக்கம்னா இது என மாமன்னன் படத்தில் பகத் பாசில் பேசிய டயலாக்கை கமெண்ட் செய்து கலாய்த்து வருகின்றனர். ஒரு சிலரோ மாஸ்டர் பட பார்கவ்வும், விக்ரம் பட அமரும் பேரலல் யூனிவர்ஸில் இருப்பதாக ஒப்பிட்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்...  "அடுத்த சூப்பர் ஸ்டார் விஜயும் இல்ல.. அஜித்தும் இல்ல.." "அவர் தான்" - கான்பிடெண்டாக சொன்ன இயக்குனர்!

Read more Photos on
click me!

Recommended Stories