Thalapathy Vijay
நடிகர் விஜய் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் தயாராகி வருகிறது. விஜய்யின் மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தான் இந்த படத்தையும் இயக்கி உள்ளார். லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். மேலும் கவுதம் மேனன், மிஷ்கின், அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த், பாபு ஆண்டனி, அனுராக் கஷ்யப் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. லியோ படத்தின் ஷூட்டிங் முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Venkat Prabhu, Vijay
லியோ திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19-ந் தேதி திரைக்கு வர உள்ளது. லியோ படத்துக்கு முன்னதாகவே நடிகர் விஜய், தளபதி 68 படத்தில் கமிட் ஆகிவிட்டார். அப்படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளார் என்றும், ஏஜிஎஸ் நிறுவனம் தான் இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் ஏற்கனவே அறிவிப்பு வெளியாகிவிட்டது. அதுமட்டுமின்றி இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார் என்றும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டனர்.
இதையும் படியுங்கள்... சாகுற நிலைமைல இருந்தப்போ கூட... என் மார்பை பிடித்து சுகம் கண்டார்கள் - நடிகை சந்தியா பகீர் பேட்டி
Thalapathy 68 heroine Jyothika
தளபதி 68 படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே அப்படம் குறித்த அப்டேட்டுகளும் ஒவ்வொன்றாக கசியத் தொடங்கி உள்ளன. அதன்படி இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிக்க நடிகை ஜோதிகா கமிட் ஆகி உள்ளதாக கூறப்பட்டது. இதையடுத்து நடிகர் விஜய் இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் கசிந்தன. இந்நிலையில், தற்போது நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிக்க உள்ள மற்றொரு ஹீரோயின் குறித்த அப்டேட் வந்துள்ளது.