நானும் ரவுடி தான் படத்தின் போது காதலிக்கத் தொடங்கிய விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி, கடந்த மாதம் தான் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்கு பின்னர் ஜோடியாக தாய்லாந்துக்கு ஹனிமூன் சென்ற இந்த ஜோடி, அங்கு ஒரு வாரம் ஜாலியாக பொழுதை கழித்துவிட்டு இந்தியா திரும்பியது.
இந்தியா வந்ததும் இருவரும் தங்களது வேலைகளில் பிசியாகினர். நடிகை நயன்தாரா அட்லீ இயக்கத்தில் உருவாகும் ஜவான் படத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக அவர் நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் மூலம் நடிகை நயன்தாரா பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.
மறுபுறம் விக்னேஷ் சிவனும் தான் அடுத்ததாக இயக்க உள்ள ஏகே 62 படத்துக்கான ஆரம்பக்கட்ட பணிகளில் பிசியாக ஈடுபட்டு வருகிறாராம். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... மினுமினுக்கும் உடையில் ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷ்..வைரலாகும் போட்டோஸ்..
இந்நிலையில், விக்கி - நயன் ஜோடி இடையே சண்டை ஏற்பட்டதாக புதுத்தகவல் கோலிவுட் வட்டாரத்தில் வேகமாக பரவி வருகிறது. அவர்களிடையே சண்டை வருவதற்கு காரணம் சமந்தா தானாம். ஏனெனில் விக்கி அடுத்ததாக இயக்க உள்ள ஏகே 62 படத்தில் ஹீரோயினாக நடிக்க யாரைத்தேர்வு செய்யலாம் என்கிற பேச்சு வரும்போது, விக்னேஷ் சிவன் சட்டென சமந்தாவின் பெயரை சிபாரிசு செய்தாராம்.
இதைக் கேள்விப்பட்ட நயன், நான் இருக்கும்போது அது எப்படி சமந்தாவை நீ சொல்லலாம் என தனது காதல் கணவரிடம் சண்டையிட்டாராம். இந்த செல்ல சண்டையைப் பற்றி கேள்விப்பட்ட விக்கியின் நண்பர்கள், திருமண வாழ்க்கைல இதெல்லாம் சாதாரணமப்பா... நீ இன்னும் நிறைய பார்க்க வேண்டியது இருக்கு என கிண்டலடித்து வருகிறார்களாம்.
இதையும் படியுங்கள்... சமந்தாவை விவாகரத்து செய்ய நாக சைதன்யாவை அமீர் கான் வற்புறுத்தினார்: கேஆர்கே