அதோடு தனது ட்விட்டரில், மனைவி சமந்தாவை விவாகரத்து செய்ய நாகசைதன்யாவை எப்படி அமீர்கான் வற்புறுத்தினார் என்பது பற்றிய முழு கதையும் தனக்கு கிடைத்துள்ளது. அவர் முழு கருப்பு இதயம் கொண்டவர் என்கிற விமர்சனம் விரைவில் வெளியாகும் என குறிப்பிட்டு இருந்தார். இந்த பதிவு பேசும் பொருளாக மாறி வருகிறது.
நாகசைதன்யா, அமீர்கான் இருவரும் வரவிருக்கும் Laal Singh Chaddha என்னும் இந்தி மொழி படத்தில் ராணுவ வீரர்களாக இணைந்து நடித்துள்ளனர். அத்வைத் சந்தன் என்பவர் இயக்கியுள்ள இந்த படம் ஆகஸ்ட் 11-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.