Bayilvan Ranganathan
பிரபல நடிகராக இருந்து தற்போது சினிமா செய்தியாளராக மாறியுள்ள பயில்வான் ரங்கநாதன், அடிக்கடி நடிகர்கள், நடிகைகள் குறித்த சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டு பேசும் பொருள் ஆகி வருகிறார். அதன்படி சமீபத்தில் பார்த்திபனின் இரவில் நிழல் படத்தில் நடித்திருந்த நடிகைகளின் நிர்வாண காட்சி குறித்த கடுமையான விமர்சனங்களையும் முன் வைத்தார் பயில்வான். இதனால் கடுப்பான நடிகை ரேகா நாயர் அந்தரங்க விஷயங்கள் குறித்து யூடியூப்பில் பேசிய பயில்வான் ரங்கநாதனே பொது இடத்தில் வைத்து விளாசி இருந்தார்.
SITARAMAM
இந்நிலையில் மீண்டும் ஒரு பூகம்பத்தை கிளப்பி இருக்கிறார் பயில்வான் ரங்கநாதன். நேற்று நடைபெற்ற சீதாராமம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் செய்தி சேகரிக்கச் சென்ற இவர், நாயகன் இடம் பல கிடுக்கு பிடி கேள்விகளைக் கேட்டு விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளார். சென்னையில் நடைபெற்ற டிரைலர் வெளியீட்டு விழாவின் போது, நாயகன் துல்கர் சல்மானிடம் 'இந்த படத்திற்கு ராமம் என பெயர் வைத்துள்ளீர்களே ராமம் னா என்ன? என்று கேட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு...விஜயகாந்தை பார்த்தால் செத்து விடுவேன் ..பொன்னம்பலத்தின் உருக்கமான பேட்டி!
அதற்கு பதில் சொன்ன துல்கர், அவங்க ஒரு கதையைப் பற்றி சொல்லும் போது இரண்டையும் ஒன்றாக சேர்த்து சீதா ராமம் என்று வைத்திருக்கிறார்கள் என கூறியுள்ளார். எனக்கு புரியவில்லை ராமமா? நாமமா? என மீண்டும் கேட்ட பயில்வானிடம் இந்த கேள்விக்கு இயக்குனர் தான் பதில் சொல்ல வேண்டும். சில சூழல்களால் அவரால் கலந்து கொள்ள இயலவில்லை எனக் கூறியுள்ளார்.
SITARAMAM
கேள்விகளை நிறுத்தாமல் தொடுத்த ரங்கநாதன், அப்படின்னா அது என்னன்னு தெரியாமலேயே நடிச்சிட்டீங்களா என கிண்டலாக கேட்டுள்ளார். அதற்கு நான் இந்த படத்தில் கமிட்டாகும்போது படத்தில் படத்திற்கு பெயர் வைக்கவில்லை ஒரு மாதத்திற்கு முன்னாடி தான் பெயர் வைத்தார்கள் என்று கூறியுள்ளார் துல்கர். இவ்வாறு நம்ம ஊருக்கு வந்த மலையாள ஸ்டாரை குழப்பி அனுப்பி உள்ளார் பயில்வான் ரங்கநாதன்.
மேலும் செய்திகளுக்கு...கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற நடிகர் விமல்!
SITARAMAM
சீதாராமம் படத்தை ஹனு ராகவ்புடி இயக்கியுள்ளார். இதில் ரஷ்மிகா, மிருணாள் தாக்கூர், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியாக உள்ள இந்த படம் ஆகஸ்ட் 5ஆம் தேதி திரைக்கு வருகிறது.
மேலும் செய்திகளுக்கு...ஒலிம்பியாட் விழாவிற்கு ரஜினிகாந்த், கமல், விஜய், அஜித்-க்கு அழைப்பு !
இதன் ட்ரெய்லர் நேற்று வெளியானது. அதன்படி, நாயகனால் 20 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட கடிதத்தை ராஷ்மிகா நாயகியிடம் சேர்க்க செல்லும் போது சந்திக்கும் இன்னல்கள் தொடர்பான கதைக்களத்தை இந்த படம் கொண்டுள்ளதாக தெரிகிறது.