
February 14 Re Releasing Tamil Movies : பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு படவா, 2கே லவ் ஸ்டோரி, தினசரி, ஃபயர், பேபி அண்ட் பேபி உள்பட 10க்கும் அதிகமான படங்கள் வெளியாகும் நிலையில் காதல் தொடர்பான பழைய படங்களும் ரீ ரிலீஸ் செய்யப்படுகின்றன. வாரந்தோறும் தமிழ் சினிமாவில் எத்தனையோ படங்கள் திரைக்கு வருகின்றன. அதிலேயும் முக்கியமான பண்டிகை நாட்கள் என்றால் மாஸ் நட்சத்திரங்களின் படங்கள் திரைக்கு வரும். ஆனால், இந்த வாரம் காதலர் தினம் கொண்டாடப்படும் நிலையில் காதல் தொடர்பான படங்கள் வெளியாக இருக்கின்றன.
நடிகர் ஸ்ரீகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள தினசரி பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக சிந்தியா லூர்து நடித்துள்ளார். இதே போன்று நடிகர் பாலாஜி முருகதாஸ் மற்றும் ரச்சிதா மகாலட்சுமி ஆகியோரது நடிப்பில் உருவான ஃபயர் படம் 14ஆம் தேதி வெளியாக இருக்கிறது. 6 ஆண்டுகளுக்கு பிறகு படவா படம் 14ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் விமல், சூரி, ஸ்ரீதா ராவ் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.
இது தவிர இன்னும் பல படங்கள் திரைக்கு வர இருக்கின்றன. இந்த நிலையில் தான் புதிய படங்களுக்கு போட்டியாக பழைய படங்களும் ரீ ரிலீஸ் செய்யப்பட இருக்கின்றன. ஆனால், அந்த படங்களுக்கு திரையரங்குகள் கிடைக்குமா என்பது சந்தேகம் என்றாலும் ஏற்கனவே விடாமுயற்சி அதிகப்படியான திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் தான் 10க்கும் மேற்பட்ட புதிய படங்கள் காதலர் தினத்தை முன்னிட்டு திரைக்கு வருகின்றன. அந்த படங்களுக்கு போட்டியாக பழைய படங்களான விண்ணைத்தாண்டி வருவாயா, மின்னலே, சில்லுனு ஒரு காதல் ஆகிய படங்களும் திரைக்கு வர இருக்கின்றன.
விண்ணைத்தாண்டி வருவாயா:
கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு மற்றும் த்ரிஷா நடிப்பில் உருவான விண்ணைத்தாண்டி வருவாயா 2010 ஆம் ஆண்டு பிப்ரவரி 26ஆம் தேதி திரைக்கு வந்தது. காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்த எடுக்கப்பட்ட இந்தப் படம் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு ரீ ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது.
சில்லுனு ஒரு காதல்:
இயக்குநர் கிருஷ்ணா இயக்கத்தில் சூர்யா, ஜோதிகா, பூமிகா ஆகியோரது நடிப்பில் 2006 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் தான் சில்லுனு ஒரு காதல். காதல் கதையை மையப்படுத்திய இந்தப் படம் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு ரீ ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது.
மின்னலே:
கௌதம் மேனன் இயக்கத்தில் மாதவன், ரீமாசென், அப்பாஸ், விவேக் ஆகியோர் பலர் நடிப்பில் 2001 ஆம் ஆண்டு வெளியான படம் தான் மின்னலே. காலேஜ் மற்றும் காதல் கதையை மையப்படுத்திய இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற இந்தப் படம் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு ரீ ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ரூ.20 டிக்கெட் முதல்; வேட்டையன் வரை! பல ஹிட் படங்களை வெளியிட்ட உதயம் அஸ்தமனம் ஆனது!
தண்டேல் வெற்றிக்கு தன்னுடைய மருமகள் தான் காரணம் – புகழ்ந்து பேசிய நாகர்ஜூனா!