
சென்னையில் மல்டி பிளக்ஸ் திரையரங்குகள் எத்தனை இருந்தாலும், உதயம், கமலம், சத்யம், காசி போன்ற திரையரங்குகளின் பெயரை தான் அதிகம் கேட்டு பழகி இருப்போம். குறிப்பாக அசோக் பில்லர், தாண்டி செல்பவர்கள் பலரும், ஒரு லாண்ட் மார்க்காக சொல்லும் இடம் உதயம் திரையரங்கு தான். மழை, வெயில் காலத்தில், இந்த திரையரங்கம் பலர் இளைப்பாற தன்னுடைய வாசலில் இடம் கொடுத்துள்ளது.
வசதியானவர்கள் மட்டுமே சில திரையங்குகளில் படம் பார்ப்பார்கள். ஆனால் உதயம் திரையரங்கில் தான் அடிப்படை ஏழைகள் கூட படம் பார்க்க அனுமதிக்க படுகிறார்கள். நரிக்குறவ மக்களை முதல் முதலில் திரையரங்கில் எந்த பாகு பாடும் இன்றி அனுமதித்தது கூட உதயம் திரையரங்கு தான்.
மீண்டும் பயோபிக்கில் நடிக்கும் மாதவன்...இப்போ யார் கதை தெரியுமா?
சில பழைய தியேட்டர்கள் தொடர்ந்து இடிக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒரு கட்டமாக லஸ் ஜங்ஷன் அருகே லக்ஷ்மி விலாஸ் மேன்ஷன் என்று அழைக்கப்பட்ட காமதேனு தியேட்டர் ஏற்கனவே இடிக்கப்பட்ட சம்பவம் நடந்தது. இந்த தியேட்டருக்கு ஒரு வரலாற்றில் முக்கிய இடம் உண்டு. 16 ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசியர்களால் கட்டப்பட்ட லக்ஷ்மி விலாஸ் மயிலாப்பூரில் உள்ள லஸ் சாலையில் பிரபலமான தியேட்டராக இருந்தது. 20 ஆம் நூற்றாண்டில் மயிலாப்பூர் முறையாக உருவாக்கப்பட்டு எல்லைகள் வரையறுக்கப்பட்ட பின்னர், லட்சுமி விலாஸ் காமதேனு தியேட்டராக மாறியது. அதன்பின் இங்கே பல படங்கள் திரையிடப்பட்டன.
மயிலாப்பூர் பகுதியில் அப்போது இருந்த ஒரே திரையரங்கம் காமதேனு. அந்த காலகட்டத்தில், விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் படம் போட்டால் இந்த திரையரங்கில் குடும்பம் குடும்பமாக வந்து பலர் படம் பார்த்து சென்றுள்ளனர். டிக்கெட் விலை 50 பைசா இருந்த காலத்தில் இருந்தே அங்கே படங்கள் வெளியிடப்பட்டன. திரையரங்கு மூன்று தலைமுறை சினிமா ஆர்வலர்களைக் கடந்து நிலைத்தது. இங்கே 2,000 க்கும் மேற்பட்ட திரைப்படங்களை திரையிட்டது. கொரோனாவிற்கு பின் இங்கே பெரிய அளவில் சினிமா திரையிடப்படவில்லை. இதில் ஏற்பட்ட சரிவு உள்ளிட்ட பல காரணங்களால் தியேட்டர் மூடப்பட்டு தற்போது இடிக்கப்பட்டு உள்ளது.
நடிகை 2 மாத கர்ப்பம்; பண்ணை வீட்டில் கிலோ கணக்கில் தங்கத்தால் அலங்காரம் செய்த நடிகர்?
இது போக தற்போது சென்னையின் பிரபல தியேட்டர்களில் ஒன்றான உதயம் தியேட்டர் மூடப்போவதாக கடந்த ஆண்டே அறிவிக்கப்பட்டது. உதயம் திரையரங்கை இடித்து விட்டு அந்த தியேட்டர் இருக்கும் பகுதியில் காசாகிராண்ட் நிறுவனம் மிகப்பெரிய 25 மாடி அடுக்கு கட்டிடம் ஒன்றை கட்ட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அலுவலகம் + குடியிருப்பு பாணியில் இங்கே அடுக்குமாடி கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே சென்னையில் பல முக்கிய பழைய ஹோட்டல்கள், இடங்கள் வாங்கப்பட்டு உயர் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
அப்படித்தான் தற்போது உதயம் தியேட்டரும் வாங்கப்பட்டு உள்ளது. " உதயம் தியேட்டரில் என் இதயத்தை தொலைச்சேன்.." என்று பாடல் தொடங்கி சென்னையின் லேண்ட்மார்க் பகுதிகளில் ஒன்றாக இந்த தியேட்டர் அஸ்தமனம் ஆக போவதை உறுதி செய்துள்ளனர். கடைசியாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான வேட்டையன் படம் ஓடிய நிலையில், பின்னர் உதயம் திரையரங்கை இடிக்கும் பணிகள் தூங்கியது. தற்போது சீட்டு கட்டுபோல் உதயம் தியேட்டர் சரிந்து விழும் வீடியோ வைரலாகி வருகிறது. 20 ரூபாய் டிக்கெட் விற்ற காலத்தில் இருந்து ரூ.120 வரை விற்கப்பட்டு வந்தவரை பல வருடங்களாக சென்னை மகிழ்வித்து வந்த இந்த திரையரங்கம் தற்போது இடிக்கப்பட்டுள்ளது மக்களை கலங்க வைத்துள்ளது.
அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு போன கஞ்சா கருப்பு ஆதங்கம்! என்ன நடந்தது?