இந்தி நடிகர் ரோஹித் பாஸ்ஃபோர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மனோஜ் பாஜ்பாயுடன் 'ஃபேமிலி மேன் 3' வெப் தொடரில் முக்கிய வேடத்தில் நடிக்கவிருந்த ரோஹித், மர்மமான முறையில் இறந்து கிடந்தது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. அவரது உடல் ஏப்ரல் 27ந் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை அசாமில் உள்ள கர்பாங்கா காட்டில் ஒரு நீர்வீழ்ச்சி அருகே கண்டெடுக்கப்பட்டது. அவரது உடலில் பல காயங்கள் இருந்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
24
நண்பர்களுடன் சுற்றுலா சென்றிருந்த ரோஹித் பாஸ்ஃபோர்
காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், ரோஹித் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:30 மணியளவில் நண்பர்களுடன் சுற்றுலா சென்றதாகவும், மாலை அவர்களுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர். பின்னர் ஒரு நண்பர் ரோஹித்தின் குடும்பத்திற்கு இந்த சம்பவம் குறித்துத் தெரிவித்திருக்கிறார். உடனடியாக அவரது உறவினர்கள் மாநில பேரிடர் மீட்புப் படையைத் (SDRF) தொடர்பு கொண்டு, காட்டில் இருந்து அவரது உடலை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு வந்துள்ளனர்.
காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், ரோஹித்தின் நான்கு நண்பர்கள் அவரைக் கொலை செய்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சதி என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். சில நாட்களுக்கு முன்பு பார்க்கிங் தொடர்பாக ரோஹித்துக்கு ஒரு பிரச்சினை ஏற்பட்டதாகவும், அதன் பின்னர் மூன்று பேர் அவரைக் கொலை செய்வதாக மிரட்டியதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
ரஞ்சித் பாஸ்ஃபோர், அசோக் பாஸ்ஃபோர் மற்றும் தர்ம பாஸ்ஃபோர் ஆகிய மூவரையும் ரோஹித்தின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், ரோஹித்தை வெளியே அழைத்துச் சென்ற உடற்பயிற்சி பயிற்சியாளர் அமர் தீப் என்பவரும் இந்தச் சதியில் ஈடுபட்டிருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளனர். தற்போது இவர்கள் நான்கு பேரும் தலைமறைவாக உள்ளனர்.
44
ரோஹித் பாஸ்ஃபோரின் உடலில் பல காயங்கள்
ரோஹித்தின் உடலைக் கைப்பற்றிய காவல்துறை, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியது. திங்கட்கிழமை நடந்த பிரேதப் பரிசோதனையில், அவரது முகம், தலை மற்றும் உடலின் பிற பகுதிகளில் காயங்கள் இருப்பது தெரியவந்தது. காவல்துறை இந்த வழக்கை விசாரித்து, குற்றம் சாட்டப்பட்டவர்களைத் தேடி வருகிறது. ஃபேமிலி மேன் 3 வெப் தொடரில் நடிக்க இருந்த நடிகர் பிணமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.