அவுரங்கசீப்பை பளார் என அறைவேன் - நடிகர் விஜய் தேவரகொண்டா ஓபன் டாக்

Published : Apr 29, 2025, 07:54 AM IST

நடிகர் விஜய் தேவரகொண்டா, சமீபத்தில் ரெட்ரோ பட ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது அவுரங்கசீப்பை அறைய விரும்புவதாக கூறி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

PREV
14
அவுரங்கசீப்பை பளார் என அறைவேன் - நடிகர் விஜய் தேவரகொண்டா ஓபன் டாக்

Vijay Deverakonda wants to slap Aurangzeb : தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. இவர் நடிப்பில் தற்போது கிங்டம் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதனிடையே, அண்மையில் ஐதராபாத்தில் நடைபெற்ற சூர்யாவின் ரெட்ரோ பட ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் தேவரகொண்டா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்து வியத்தகு பதில்கள் பற்றி இங்கே காணலாம்.

24
Vijay Deverakonda

விஜய் தேவரகொண்டாவின் ஆச்சர்ய பதில்

அதில் டைம் டிராவல் செய்து கடந்த காலத்திற்கு சென்று யாரையேனும் சந்திக்க விரும்பினால் யாரை சந்திப்பீர்கள் என்கிற கேள்வி முன்வைக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த விஜய் தேவரகொண்டா, ஆங்கிலேயர்களை சந்திக்க விரும்புகிறேன் என தெரிவித்தார். அவர்களை சந்தித்து அவர்களுக்கு பளார் என இரண்டு அறை கொடுக்க விரும்புவதாக கூறினார். அதேபோல் மற்றுமொரு நபரை அறைய விரும்புவதாக விஜய் தேவரகொண்டா அந்த நிகழ்ச்சியில் கூறி இருந்தார்.

இதையும் படியுங்கள்... மாட்டிக்கிட்ட பங்கு! ஜோடியாக பாரின் ட்ரிப்; வசமாக சிக்கிய ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா!

34
Vijay Deverakonda in Retro Pre Release Event

அவுரங்கசீப்பை அறைய விரும்பும் விஜய் தேவரகொண்டா

அவர் வேறுயாருமில்லை, அவுரங்கசீப்பை அறைய விரும்புவதாக கூறி இருக்கிறார். சமீபத்தில் சாவா படம் பார்த்த பின்னர் அவுரங்கசீப்பை நேரில் சந்தித்தால் பளார் என இரண்டு அறை கொடுக்க வேண்டும் என விரும்புவதாக அவர் கூறினார். அவரின் இந்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதேபோல் பஹல்காம் தாக்குதல் சம்பவம் குறித்து பேசிய அவர், பயங்கரவாதிகளுக்கு மூளை இல்லை என்றும் அவர்களுக்கு கல்வி கற்பிக்கப்பட வேண்டியது அவசியம் எனவும் கூறினார்.

44
vijay deverakonda about Pahalgam Attack

பஹல்காம் தாக்குதல் பற்றி விஜய் தேவரகொண்டா சொன்னதென்ன?

பாகிஸ்தானுக்கு தன் நாட்டுக்குள் நடக்கும் சொந்த பிரச்சனையை கூட கையாள முடியாது. ஆனால் காஷ்மீருக்காக இந்தியாவை தாக்க மட்டும் துணிச்சல் உள்ளது. காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தமானது. அது நம் நாட்டின் ஒருங்கிணைந்த ஒரு பகுதி, பாகிஸ்தான் உடன் இந்தியா போருக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. பாகிஸ்தானியர்களே தங்கள் அரசாங்கத்தால் சலிப்படைந்து ஒரு நாள் அவர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்வார்கள் என்று விஜய் தேவரகொண்டா கூறி இருக்கிறார்.

இதையும் படியுங்கள்... ராஷ்மிகா மந்தனாவை செல்ல பெயர் வச்சு உரிமையோடு கூப்பிடும் விஜய் தேவரகொண்டா!

Read more Photos on
click me!

Recommended Stories