பெயரை குறிப்பிடாமல் அஜித் மீது குற்றம்சாட்டிய முன்னாள் காதலி: போதைக்கு அடிமையாகவில்லை - ஹீரா

Published : Apr 28, 2025, 08:37 PM IST

Ajith Kumar Ex girlfriend Heera : அஜித் பெயரை வெளிப்படையாக கூறி அவரை பிரிந்து பல வருடங்களுக்கு பிறகு அவர் மீது அவரது முன்னாள் காதலி ஹீரோ பல குற்றங்களை சுமத்தியுள்ளார்.

PREV
17
பெயரை குறிப்பிடாமல் அஜித் மீது குற்றம்சாட்டிய முன்னாள் காதலி: போதைக்கு அடிமையாகவில்லை - ஹீரா
Good Bad Ugly global collection reports

Ajith Kumar Ex girlfriend Heera : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் இப்போது சினிமாவிலும் கார் ரேஸிலும் பிஸியாக இருக்கிறார். 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான விடாமுயற்சி படத்திற்கு பிறகு அவரது நடிப்பில் உருவான குட் பேட் அக்லீ படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதோடு ரூ.240 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்து வருகிறது.

 

27
Good Bad Ugly film ott updates out

கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியை கண்டு ரசித்தார். இந்த நிலையில் தான் தற்போது டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற பத்ம விருது வழங்கும் விழாவில் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. இந்த விழாவின் அஜித்தின் மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா மற்றும் மகன் ஆத்விக் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

37
Good Bad Ugly Kerala collection reports

இந்த நிலையில் தான் அஜித்தின் முன்னாள் காதலியான ஹீரா ராஜகோபால் அஜித் குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளர். தனது எக்ஸ் பக்கத்தில் அஜித் தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாகவும், தன்னை போதைக்கு அடிமையானவர் என்று கூறியதாகவும் கூறியுள்ளார். இது குறித்து ஹீரா தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: அஜித் தனக்கு முதுகுத்தண்டில் காயம் ஏற்பட்டதாக கூறினார். மேலும், அதற்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும் கூறினார். அந்த காலகட்டங்களில் நான் தான் அவருக்கு அருகில் இருந்து அவருக்கு உதவியாக இருந்தேன்.

47
Heera

மேலும், நான் ஒரு வேலைக்காரனை போன்று இருக்கும் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள போகிறேன். யாரும் அவளை பார்க்க மாட்டார்கள். நான் விரும்பும் யாருடனும் என்னால் இருக்க முடியும் என்று அஜித் குறிப்பிட்டதாக ஹீரா கூறினார்.

57

அஜித் ‘என் வீடு என் கணவர் படம் மூலம் நடிகராக அறிமுகமானார். இவருக்கு முதன் முதலில் திருப்புமுனையாக அமைந்த படம் என்றால் அது காதல் கோட்டை தான். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹீரா நடித்திருந்தார். இந்தப் படத்தில் நடிக்கும் போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாகவும் மாறியது. காதல் கோட்டை படத்துக்கு பின்னர் அஜித்தும், ஹீராவும் தொடரும் படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர்.

67

பின்னர் போகப்போக ஹீராவின் பழக்க வழக்கங்கள் அஜித்துக்கு பிடிக்காமல் போனதால் அவர்கள் இருவரும் கடந்த 1998-ம் ஆண்டு பிரேக் அப் செய்து பிரிந்துவிட்டனர். இந்த காதல் முறிவு பற்றி அஜித்தே பழைய பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார். அதில், நாங்கள் ஒன்றாக வாழ்ந்தோம். எனக்கு அவரை மிகவும் பிடித்திருந்தது. ஆனால் தற்போது எல்லாம் மாறிவிட்டது. அவர் ஒரே மாதிரியாக இல்லை. சொல்லப்போனால் அவர் போதைக்கு அடிமையாகிவிட்டார் என தெரிவித்திருந்தார்.

77

ஹீராவை பிரேக் அப் செய்து பிரிந்த அடுத்த ஆண்டே நடிகை ஷாலினி மீது காதல் வயப்பட்டார் அஜித், அமர்க்களம் பட ஷூட்டிங்கில் ஷாலினியை பார்த்த உடனே அவர் மீது காதலில் விழுந்துவிட்டாராம் அஜித். குறிப்பாக அப்பட ஷூட்டிங்கின் போது ஷாலினியின் கையில் கத்தி பட்டு ரத்தம் வந்ததால் துடிதுடித்துபோன அஜித் அவரை மருத்துவமனையில் அனுமதித்து அக்கறையோடு பார்த்துக்கொண்டாராம். அவரின் இந்த குணத்தால் தான் ஷாலினிக்கு அஜித் மீது காதல் வந்ததாம். அப்படம் முடித்ததும் இருவரும் திருமணம் செய்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories