Ajithkumar Receives Padma Bhushan Award : தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். இவர் 1993-ல் வெளிவந்த அமராவதி படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதையடுத்து ஆசை, வாலி, அமர்க்களம் என ரொமாண்டிக் ஹீரோவாக வலம் வந்த அஜித்தை, தீனா படம் மூலம் ஆக்ஷன் ஹீரோவாக மாற்றினார் ஏ.ஆர்.முருகதாஸ். அப்படத்திற்கு பின்னர் அவர் அடுத்தடுத்து மாஸ் படங்களில் நடித்து தன்க்கென ஒரு ரசிகர் படையையே உருவாக்கினார். வெற்றியை விட அதிகளவில் தோல்விப் படங்களை கொடுத்தாலும் அவர்மீது ரசிகர்கள் வைத்துள்ள அன்பு அவரை அல்டிமேட் ஸ்டாராக உயர்த்தி உள்ளது.
24
Ajithkumar
பத்ம பூஷன் விருது வென்ற தமிழ் நடிகர்கள்
கலைத்துறையில் சிறந்த பங்களிப்பை அளித்ததற்காக நடிகர் அஜித்துக்கு பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டது. ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவாஜி கணேசன், விஜயகாந்த் ஆகியோருக்கு அடுத்தபடியாக பத்ம பூஷன் விருது வெல்லும் ஐந்தாவது தமிழ் நடிகர் என்கிற பெருமையை அஜித்குமார் பெற்றுள்ளார். இந்த பெருமைமிகு விருது அஜித்துக்கு அறிவிக்கப்பட்டதும் அவரது ரசிகர்கள் அதை தடபுடலாக கொண்டாடினர்.
இந்நிலையில், பத்ம விருதுகள் வென்றவர்களுக்கு விருது வழங்கும் விழா டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் இந்த ஆண்டு பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷண் விருது வென்றவர்களுக்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு விருதுகளை வழங்கினார். இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்துகொண்டார். இந்த ஆண்டு மொத்தம் 139 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டு உள்ளது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் மட்டும் மொத்தம் 13 பேர். அதில் அஜித்குமாரும் ஒருவர்.
44
Ajith Receives Padma Bhushan
பத்ம பூஷன் அஜித்குமார்
நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷன் விருதை குடியரசு தலைவர் திரெளபதி முர்மு வழங்கினார். இந்த பெருமைமிகு நிகழ்வின் போது அஜித்தின் மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக் ஆகியோரும் உடன் இருந்தனர். நடிகர் அஜித்குமார் கோர்ட் சூட் அணிந்து செம ஸ்டைலிஷ் லுக்கில் வந்து பத்ம பூஷன் விருதை பெற்றுக்கொண்டார். அவர் குடியரசு தலைவர் கையால் விருதை வாங்கியபோது எடுத்த புகைப்படத்தை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.