Sreeleela Introduces New Baby : தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ரீலீலா. மருத்துவம் படித்து முடித்த கையோடு சினிமாவில் எண்ட்ரி கொடுத்த ஸ்ரீலீலா, தெலுங்கில் அடுத்தடுத்து மகேஷ்பாபு, பாலகிருஷ்ணா, அல்லு அர்ஜுன் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டிரெண்டிங் நாயகியாக உருவெடுத்தார். தற்போது பாலிவுட், கோலிவுட்டிலும் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருவதால், பான் இந்தியா நாயகியாக வலம் வந்துகொண்டிருக்கிறார் ஸ்ரீலீலா.
24
பராசக்தி ஹீரோயின் ஸ்ரீலீலா
நடிகை ஸ்ரீலீலா தமிழில் பராசக்தி என்கிற திரைப்படம் மூலம் அறிமுகமாகிறார். இப்படத்தை சுதா கொங்கரா இயக்குகிறார். இப்படத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா ஆகியோருடன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஸ்ரீலீலா. இப்படம் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகி வருகிறது. இப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார். இப்படம் வருகிற 2026-ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வர உள்ளது.
அதே நேரத்தில், பாலிவுட்டிலும் அனுராக் பாசுவின் பெயரிடப்படாத காதல் த்ரில்லர் படத்தில் கார்த்திக் ஆரியனுக்கு ஜோடியாக நடிக்கிறார் ஸ்ரீலீலா. சட்டச் சிக்கல்கள் காரணமாக, தயாரிப்பாளர்கள் இந்தப் படத்திற்கு முன்பு வைத்திருந்த ஆஷிக்கி 3 என்ற பெயரை கைவிட்டனர். பூஷண் குமார் மற்றும் கிருஷண் குமார் இணைந்து தயாரிக்கும் இந்தப் படம் ஒரு காதல் கதையை மையமாக வைத்து உருவாகிறது. இப்படம் 2025ம் ஆண்டு தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகும் என்று தகவல்கள் தெரிக்கின்றன.
44
ஸ்ரீலீலாவின் புதுக் குழந்தை
இந்த நிலையில், நடிகை ஸ்ரீலீலா சமீபத்தில் தனது குடும்பத்தில் ஒரு புதிய உறுப்பினரை அறிமுகப்படுத்தினார். அவர் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பெண் குழந்தையை கட்டிப்பிடித்தபடி இருக்கும் இரண்டு புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். "வீட்டிற்கு ஒரு புதியவர்... இதயங்களின் ஆக்கிரமிப்பு" என்று ஸ்ரீலீலா தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், இந்தப் பெண் குழந்தையைப் பற்றிய கூடுதல் தகவல்கள் எதையும் அவர் பகிர்ந்து கொள்ளவில்லை. ஸ்ரீலீலா ஏற்கனவே பல ஆதரவற்ற குழந்தைகளையும், சிறுமிகளையும் தத்தெடுத்துள்ளார். இதனால் இதுவும் அவர் தத்தெடுத்துள்ள குழந்தையாக இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.