Pushpa 2 Villain Joins in Jailer 2 Movie : தமிழ் சினிமாவில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களில் ஒன்று ஜெயிலர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் டைகர் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்த இப்படம் உலகளவில் 650 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் உருவாகும் என அறிவிக்கப்பட்டது.
24
Jailer 2
விறுவிறுவென தயாராகும் ஜெயிலர் 2
இந்த ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் பண்டிகையன்று, ஒரு புரோமோ வீடியோவுடன் ஜெயிலர் இரண்டாம் பாகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ரஜினிகாந்த், நெல்சன் மற்றும் அனிருத் ஆகியோர் இந்த புரோமோவில் இடம்பெற்றிருந்தனர். தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஓப்பனிங் வசூல் செய்ய வாய்ப்புள்ள படங்களில் ஜெயிலர் 2-வும் ஒன்று. அனிருத் ரவிச்சந்தர் தான் இரண்டாம் பாகத்திற்கும் இசையமைக்கிறார். முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகமும் அதிரடி காட்சிகள் நிறைந்திருக்கும் என கூறப்படுகிறது.
ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதமே தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்திய படக்குழு, இரண்டாம் கட்ட படப்பிடிப்பை கேரளாவில் நடத்தி வருகிறது. இதில் ரஜினிகாந்த், ரம்யாகிருஷ்ணன், மிர்ணா ஆகியோர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. ஜெயிலர் முதல் பாகத்தில் கேமியோ ரோலில் நடித்த மோகன்லால், ஷிவராஜ்குமார் ஆகியோர் ஜெயிலர் 2விலும் நடிப்பார்கள் என கூறப்படுகிறது.
44
Fahadh Faasil, Rajinikanth
ஜெயிலர் 2வில் இணைந்த பகத் பாசில்
இந்நிலையில், ஜெயிலர் 2 படத்தில் மற்றுமொரு மாஸ் நடிகர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி மலையாள நடிகர் பகத் பாசிலும் ஜெயிலர் 2 படத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் இதற்கு முன்னர் வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த் உடன் நடித்திருந்தார். தற்போது ஜெயிலர் 2 படத்திற்காக அவர்கள் இருவரும் மீண்டும் இணைந்துள்ள தகவல் கோலிவுட் வட்டாரத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. ஜெயிலர் 2 படத்தை அடுத்த ஆண்டு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர்.