மாமன்னன் திரைப்படம் தியேட்டரில் வெளியாகி சக்கைப்போடு போட்ட பின், கடந்த ஜூலை 27-ந் தேதி ஓடிடியில் வெளியானது. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸான இப்படம் இந்தியளவில் டிரெண்டாகி நம்பர் 1 இடத்தையும் பிடித்தது. ஆனால் இந்த டிரெண்டிங்கை நினைத்து மாமன்னன் படக்குழு உற்சாகமடையவில்லை. இதற்கு காரணம் பகத் பாசில் தான். அவர் இப்படத்தில் சாதி வெறி பிடித்த அரசியல்வாதியான ரத்னவேலு என்கிற கேரக்டரில் நடித்திருந்தார்.
நெட்டிசன்களின் இந்த செயலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தாலும், இந்த டிரெண்டிங் ஓய்ந்தபாடில்லை. எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியது போல், நேற்று நடிகர் பகத் பாசில் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் ரத்னவேலு கேரக்டர் புகைப்படங்களை டிபியாக வைத்தார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் பகத் பாசிலுக்கே இது பிடித்திருக்கிறது என குஷியடைந்து மேலும் சில வீடியோக்களை வெளியிட தொடங்கினர்.