Jailer
அண்ணாத்த படத்தின் தோல்விக்கு பின்னர் கடந்த 2 ஆண்டுகளாக ரஜினி நடிப்பில் எந்த படமும் ரிலீஸ் ஆகவில்லை. இதையடுத்து அவர் கமிட் ஆன திரைப்படம் தான் ஜெயிலர். இப்படத்தை நெல்சன் இயக்கி உள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார். மேலும் ஷிவ ராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராப், மோகன்லால், தமன்னா, யோகிபாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.
இது ஒருபுறம் இருக்க நடிகர் ரஜினிகாந்த், ஜெயிலர் படத்துக்காக வாங்கிய சம்பள விவரம் லீக் ஆகி உள்ளது. அடுத்தடுத்த படங்களுக்கு ரூ.100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வரும் ரஜினி, ஜெயிலர் படத்திற்காக மிகவும் கம்மியான தொகையை சம்பளமாக வாங்கி உள்ளாராம். அதன்படி இப்படத்திற்காக அவர் வெறும் ரூ.75 கோடி மட்டுமே சம்பளமாக வாங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் இந்த அளவுக்கு கம்மி சம்பளம் வாங்கியதற்கு அண்ணாத்த படத்தின் தோல்வி தான் காரணமாம்.
jailer
ரஜினி நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்த திரைப்படம் தோல்வியை தழுவியது. கடந்த 2021-ம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வந்த இப்படம் பெரியளவில் வெற்றியை கொடுக்காத காரணத்தால் தான் ஜெயிலர் படத்திற்காக தன் சம்பளத்தை குறைத்துக் கொண்டாராம் ரஜினி. ஜெயிலர் படத்தை தயாரித்துள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் அண்ணாத்த படத்தையும் தயாரித்து இருந்தது. தயாரிப்பாளரின் நலன் கருதி ரஜினி எடுத்துள்ள இந்த முடிவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
இதையும் படியுங்கள்... இது சரிப்பட்டு வராது... விடாமுயற்சிக்கு குட் பாய் சொல்லிட்டு விருட்டென கிளம்பிய அஜித் - ஷாக் ஆன ரசிகர்கள்