தமிழ் திரையுலகில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வருபவர் அஜித். தன்னுடைய விடாமுயற்சியால் விஸ்வரூப வெற்றிகண்டு, இன்று கோடிக்கணக்கான ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து இருக்கிறார் என்றால் அதற்கு அவரது கடின உழைப்பு தான் காரணம். மற்ற நடிகர்களைக் காட்டிலும் அஜித் சற்று வித்தியாசமானவர். படங்களின் நடிப்பதோடு சரி, அதற்கான புரமோஷன் நிகழ்ச்சிகளிலோ, விருது விழாக்களிலோ தலைகாட்டுவதே இல்லை. இருந்தாலும் அவருக்கான ரசிகர் கூட்டம் பெருகிக் கொண்டே தான் செல்கிறது.
24
Ajith
அஜித் நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியானது. கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வந்த இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் நடிக்க இருந்த திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், மகிழ் திருமேனி இயக்க உள்ளதாகவும் கடந்த மே மாதமே அறிவிப்பு வந்துவிட்டது. ஆனால் இதுவரை இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கவில்லை.
விடாமுயற்சி இப்போ... அப்போனு இழுத்தடித்து வந்த படக்குழு, இம்மாதம் இரண்டாவது வாரத்தில் கண்டிப்பாக ஷூட்டிங்கை தொடங்கிவிடும் என கூறப்பட்டு வந்தது. இதனால் அஜித் ரசிகர்களும் குஷியில் இருந்தனர். அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் தற்போது ஒரு சம்பவத்தை செய்திருக்கிறார் அஜித். அது என்னவென்றால், அவர் தற்போது வெளிநாட்டில் தன்னுடைய உலக பைக் சுற்றுலாவை மீண்டும் தொடங்கி இருக்கிறார்.
44
ajith
ஜெர்மனி, நார்வே போன்ற நாடுகளில் தற்போது அஜித் உலக பைக் சுற்றுலாவை மேற்கொண்டு வருகிறார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றனர். இதைப்பார்த்த ரசிகர்கள் அப்போ விடாமுயற்சி அவ்ளோதானா என சோகத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர். அஜித் தற்போது உலக பைக் சுற்றுலா சென்றுள்ளதை பார்த்தால், விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் தற்போதைக்கு தொடங்க வாய்ப்பில்லை என்பதுபோல தெரிகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.