தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக கலக்கி வந்தவர் சந்தானம். இதையடுத்து ஹீரோவான பின்னர் காமெடி வேடங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்ட சந்தானம், தொடர்ந்து வித்தியாசமான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக சந்தானம் ஹீரோவாக நடித்து வெளியான படங்கள் அனைத்தும் தொடர்ந்து தோல்வியை தழுவின. தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அண்மையில் வெளியான டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் அமைந்தது.