Maareesan Release Date : 2023ல் வெளியாகி தென்னிந்தியா முழுவதும் கவனத்தை ஈர்த்த 'மாமன்னன்' படத்திற்குப் பிறகு வடிவேலுவும் ஃபஹத் ஃபாசிலும் இணைந்து நடிக்கும் படம் மாரீசன். 2024ல் அறிவிக்கப்பட்ட இப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. மாரீசன் படத்தின் வெளியீட்டு தேதியை பகத் பாசில் தன்னுடைய முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதன்படி இப்படம் 2025ம் ஆண்டு ஜூலையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் தேதி இன்னும் வெளியிடப்படவில்லை. பகத் பாசிலும் வடிவேலுவும் நேருக்கு நேர் நிற்கும் போஸ்டரையும் படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர்.