Tamil Cinema Hit Movies in 2025 : 2025ம் ஆண்டு ஜெட் வேகத்தில் சென்றுகொண்டிருக்கிறது. இந்த ஆண்டு தொடங்கி அதற்கு மூன்று மாதங்கள் விறுவிறுவென சென்றுவிட்டன. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு கோலிவுட்டுக்கு ஒரு நம்பிக்கை தரும் ஆண்டாகவே அமைந்துள்ளது. கடந்த ஆண்டு முதல் ஆறு மாதங்கள் ஒரு ஹிட் படங்கள் கூட கொடுக்காத கோலிவுட், இந்த ஆண்டு மாதத்திற்கு குறைந்தது ஒரு ஹிட் படமாவது கொடுத்து நம்பிக்கை அளித்து வருகிறது. அந்த வகையில் 2025-ம் ஆண்டு இதுவரை தமிழ் சினிமாவுக்கு எத்தனை ஹிட் படங்கள் வந்துள்ளன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஜனவரி மாத ஹிட் படங்கள்
ஜனவரி மாதம் பொங்கல் ரிலீஸ் படங்களை தான் தமிழ் சினிமா மலைபோல் நம்பி இருந்தது. அதில் புதுப்படங்கள் சொதப்பினாலும் 13 ஆண்டுகளுக்கு பின் ரிலீஸ் அன விஷாலின் பழைய படமான மதகஜராஜா தமிழ் சினிமாவின் மானத்தை காப்பாற்றியது. அப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்து ஹிட் அடித்தது. இதையடுத்து அந்த மாத இறுதியில் குடியரசு தினத்தை ஒட்டி ரிலீஸ் ஆன மணிகண்டனின் குடும்பஸ்தன் திரைப்படமும் அமோக வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்திருந்தது.
இதையும் படியுங்கள்... தமிழ்நாட்டில் ‘இந்த’ ஊர மையமா வச்சு படம் எடுத்தாலே கன்பார்ம் ஹிட்டு தான்!
பிப்ரவரி மாத ஹிட் படங்கள்
ஜனவரி மாதம் 2 ஹிட் படங்களை கொடுத்த கோலிவுட், பிப்ரவரி மாதம் முதல் வாரத்திலேயே பிரம்மாண்ட வெற்றியை ருசிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் பிப்ரவரி 6ந் தேதி அஜித்தின் விடாமுயற்சி படம் ரிலீஸ் ஆனது. ஆனால் அப்படம் அட்டர் பிளாப் ஆனது. இதையடுத்து காதலர் தினத்தன்று வெளியான படங்களும் சொதப்பிய நிலையில், 3வது வாரம் ரிலீஸ் ஆன பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படம் கோலிவுட்டுக்கு நம்பிக்கை அளித்தது. இந்த ஆண்டு அதிக வசூல் செய்த படமும் டிராகன் தான். அப்படம் சுமார் 140 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.
மார்ச் மாத ஹிட் படங்கள்
பிப்ரவரி மாதம் டிராகன் கொடுத்த வெற்றியை தொடர்ந்து மார்ச் மாதத்தில் ஜிவி பிரகாஷின் கிங்ஸ்டன், ரியோ நடித்த ஸ்வீட் ஹார்ட் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த இரண்டு படங்களுமே சொதப்பியது. இதனால் மார்ச் மாதம் முதல் 3 வாரம் ஒரு ஹிட் கூட கொடுக்காமல் திண்டாடிய கோலிவுட்டுக்கு லேட்டா வந்தா கெத்தாக ரிலீஸ் ஆகி மாஸ் வெற்றியை கொடுத்தது வீர தீர சூரன் திரைப்படம். விக்ரம் நடித்துள்ள இப்படம் திரையரங்குகளில் சக்கைப்போடு போட்டு வருகிறது. இப்படம் நடிகர் விக்ரமுக்கு மட்டுமல்ல தமிழ் சினிமாவுக்கே கம்பேக் படமாக அமைந்துள்ளது.
இதையும் படியுங்கள்... கம்பேக் கொடுத்தாரா விக்ரம்? வீர தீர சூரன் பாகம் 2 விமர்சனம் இதோ