நடிகர் தனுஷ் அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடித்து வந்தாலும், திரைப்படம் இயக்குவதிலும் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது தனுஷின் அடுத்த பட ஹீரோ குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
'துள்ளுவதோ இளமை' திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனவர் தனுஷ். தமிழ் ரசிகர்கள் மத்தியில் நிலையான ஹீரோ என்கிற இடத்தை பிடித்த பின்னர், திரையுலகில் தன்னுடைய அடுத்தடுத்த திறமைகளை வெளிப்படுத்த தொடங்கினார். அந்த வகையில் தற்போது இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், என தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ள தனுஷ்... தென்னிந்திய திரை உலகத்தை தாண்டி, பாலிவுட் - ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார்.
27
பா பாண்டி திரைப்படம்
கடந்த 2017 ஆம் ஆண்டு, தன்னுடைய அப்பா கஸ்தூரி ராஜாவின் முதல் பட (ராசாவின் மனசிலே) ஹீரோவான ராஜ் கிரணை கதையின் நாயகனாக வைத்து இயக்கிய திரைப்படம் தான் பா பாண்டி. ராஜ்கிரணின் இளம் வயது கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்திருந்தார். இந்த படத்தில் ரேவதி, மடோனா செபஸ்டின், சாயா சிங், நந்தா, டிடி, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இளம் வயதில் தான் காதலித்த காதலியை வயதான காலத்தில் பார்க்க செல்லும் ஹீரோ பற்றிய கதை களம் தான் இந்த திரைப்படம். ஒரு அழகான காதல் கதையை உணர்வு பூர்வமாக இயக்கி, ஒரு இயக்குனராகவும் தன்னனுடைய வெற்றியை திரையுலகில் பதிவு செய்தார் தனுஷ்.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து கடந்த ஆண்டு, தன்னுடைய 50-ஆவது திரைப்படமான 'ராயன்' படத்தை இயக்கி நடித்திருந்தார். வடசென்னை கதைகளத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில், தனுஷ் இதுவரை நடித்த படங்களை விட மிகவும் வித்தியாசமான தோற்றத்திலும், கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். மிகவும் மெச்சூர்டாக தன்னுடைய கேரக்டரை வடிவமைத்திருந்தார். மேலும் இப்படத்தில் சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன், செல்வராகவன், பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே.சூர்யா, சரவணன், என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர்.
47
ரூ.100 கோடி வசூல்:
இப்படம் ரூ.100 கோடி வசூல் சாதனையை நிகழ்த்திய நிலையில், இதை தொடர்ந்து தன்னுடைய சகோதரியின் மகன் பவிஷை ஹீரோவாக வைத்து தனுஷ் இயக்கிய எளிமையான காதல் திரைப்படமான 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' திரைப்படம் வெளியானது.ஆனால் இப்படம் மோசமான விமர்சனங்களை பெற்று படு தோல்வியை சந்தித்தது.
இதை தொடர்ந்து அஜித்தை வைத்து தனுஷ் ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இது பற்றி, எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகாத நிலையில்... தற்போது தனுஷின் அடுத்த பட ஹீரோ யார் என்கிற புது தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
67
ராம் சரணை இயக்க உள்ளாரா தனுஷ் ?
RRR திரைப்படத்தில் நடித்து ரூ.1200 கோடிக்கு மேல் வசூல் செய்த நாயகனாக பார்க்கப்பட்ட நடிகர் ராம் சரணை ஹீரோவாக வைத்துதான் தனுஷ் தன்னுடைய அடுத்த படத்தை இயக்க உள்ளாராம் ( Dhanush - Ram Charan alliance). இதற்கான பேச்சுவார்த்தை தற்போது நடந்து வருவதாகவும் கூடிய விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை இயக்க தனுஷுக்கு 100 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம் மேலும் ராம்சரண் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான 'கேம் சேஞ்சர்' திரைப்படம் தோல்வியை சந்தித்த நிலையில், தற்போது இயக்குனர் புஜ்ஜி பாபு இயக்கத்தில் பெடி படத்தில் ராம்சரண் நடித்துள்ளார். இந்த படத்தில் ஜான்வி கபூர், ராம் சரணுக்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
குபேரா மற்றும் இட்லி கடை படங்களில் நடித்த முடித்துள்ளார்:
மேலும் தனுஷ் தற்போது குபேரா மற்றும் இட்லி கடை என இரண்டு படங்களில் நடித்த முடித்துள்ளார். இட்லி கடை திரைப்படம் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்னும் படப்பிடிப்பு முடியாததால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படுவதாக தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் சமீபத்தில் அறிவித்தார். இதை தொடர்ந்து தற்போது ஹிந்தியில் உருவாகும் 'தேரே இஷக் மெயின்' என்கிற ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக கிருதி சனோன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.