தமிழ் சினிமாவின் டாப் ஹீரோவாக இருக்கும் அஜித்துக்கு, உலகம் முழுவதிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் நடிப்பில், கடந்த பிப்ரவரி மாதம் 'விடாமுயற்சி' திரைப்படம் வெளியான நிலையில், இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த ஆண்டின் முதல் 100 கோடி வசூல் செய்த படம் என்கிற பெருமையை பெற்ற போதிலும், ரூ. 300 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ரூ.135 கோடி மட்டுமே வசூல் செய்ததால், தோல்வி படமாகவே பார்க்கப்பட்டது.
விடாமுயற்சி படத்தின் தோல்வி
இந்த படத்தை தொடர்ந்து அஜித், தன்னுடைய 63-ஆவது படத்தை 'மார்க் ஆண்டனி' படத்தின் மூலம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் அணைத்து பணிகளும் நிறைவடைந்து, படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 10-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக, 'விடாமுயற்சி' படத்தில் நடித்திருந்த நடிகை திரிஷா தான் நடித்துள்ளார். மேலும் பிரபு, பிரசன்னா, அர்ஜுன் தாஸ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
அஜித்தின் 'குட் பேட் அக்லி' தமிழக வசூலில் சாதனை படைக்கும் - பிரபலம் ஓப்பன் டாக்!
புத்தாண்டை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் குட் பேட் அக்லீ
குட் பேட் அக்லீ படத்தின், டீசர் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதில் அஜித் ஒரு கெட்டப்பில் அல்ல பல கெட்டப்பில் நடித்திருந்தார். மேலும் இந்த படத்தின் கதைக்களம் குறித்து வெளியான தகவலின்படி, கெட்டவனாக வாழும் அஜித், நல்லவனாக வாழ முயற்சிக்கும் நிலையில் அவர் எதிர்கொள்ளும் பிரச்சனையே இந்த படத்தின் கதைக்களம் என கூறப்படுகிறது. படத்தில் மாஸ் சண்டை காட்சிகள், பைக் சேசிங், கார் சேசிங் காட்சி என அஜித் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அத்தனை அம்பாசங்களும் இருக்கும் என்றும், கூடுதலாக குடும்பங்கள் கொண்டாடும் வகையில் செண்டிமெண்ட் காட்சிகளும் இருக்கும் என கூறப்படுகிறது. ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்படம் ரிலீஸ் ஆக உள்ளது.
அடுத்தடுத்து கார் பந்தயத்தில் அஜித் கலந்து கொண்டு வெற்றி
அஜித் நடிப்பில் இந்த ஆண்டு அடுத்தது இரண்டு படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது என்றாலும், அஜித் தன்னுடைய 64-ஆவது படம் பற்றி அக்டோபர் மாதத்திற்கு மேல் தான் முடிவெடுப்பார் என கூறப்படுகிறது. அதற்க்கு இடையே தீவிர கார் ரேஸ் பயிற்சியில் கலந்து உள்ள உள்ளார். துபாயில் நடந்த 24 மணிநேர கார் ரேஸில் மூன்றாவது இடம் பிடித்த அஜித்தின் ரேஸில் அணி, சமீபத்தில் இத்தாலியில் நடந்த கார் ரேஸிலும் 3-ஆவது இடம் பிடித்து இந்தியாவை பெருமை பட வைத்தார்.
இத்தாலி கார் ரேஸில் 3ஆவது இடம் பிடித்த அஜித் அண்ட் கோ – வெற்றியை கொண்டாடிய தருணம் வைரல்!
மிரட்டல் லுக்கில் அஜித்:
எப்போதும் பயிற்சியில் இருப்பதால், அஜித்தின் புகைப்படங்கள் கூட எதுவும் சமூக வலைத்தளத்தில் வெளியாகாமல் இருந்த நிலையில், தற்போது அஜித் கிளீன் ஷேவ் செய்து, மிரட்டல் லுக்கில் இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இந்த போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் அஜித் ரசிகர்களால் ட்ரெண்ட் செய்யப்பட்டும் வருவது குறிப்பிடத்தக்கது.