'ஜனநாயகன்' படத்தின் கதைக்களம் இதுவா? அரசியலுக்கு திரைப்படம் மூலம் பக்கா ஸ்கெச் போட்ட தளபதி!
தளபதி விஜய் நடித்து வரும் 'ஜனநாயகன்' படத்தின் கதைக்களம் பற்றிய தகவல், வெளியாகி படம் மீதான எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.
தளபதி விஜய் நடித்து வரும் 'ஜனநாயகன்' படத்தின் கதைக்களம் பற்றிய தகவல், வெளியாகி படம் மீதான எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.
தளபதி விஜய்யின் நடிப்பில் உருவாகி வரும் 'ஜனநாயகன்' திரைப்படத்தை, அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை, விவேகம் போன்ற படங்களை இயக்கிய, இயக்குனர் எச்.வினோத் இயக்கி உள்ளார். தளபதி விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் பிரகாஷ் ராஜ், கெளதம் மேனன், பிரியாமணி, மமிதா பைஜு, டிஜே அருணாச்சலம், வரலக்ஷ்மி, உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பாலிவுட் நடிகர் பாபி தியோல் வில்லனாக நடித்து வருகிறார்.
அனிருத் இசையமைக்கும், 'ஜனநாயகன்தி' ரைப்படத்தை கேவிஎன் நிறுவனம் சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது. தளபதி அதிகார பூர்வமாக இது தன்னுடைய கடைசி படம் என அறிவித்துவிட்டதால், இது அவரின் திரையுலக பயணத்தில் மிக முக்கியமான படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு அரசியல் சார்ந்த கதைக்களத்தில் எடுக்கப்படுவதை ஏற்கனவே இயக்குனர் எச்.வினோத் பதிவு செய்த நிலையில், இப்படத்திற்காக விஜய் போட்ட முக்கிய கண்டீஷன் குறித்தும் பகிர்ந்திருந்தார்.
விஜய்யின் ஜனநாயகன் படத்தில் அட்லீ, நெல்சன், லோகேஷுக்கு இப்படி ஒரு ரோலா?
அதாவது, எந்த ஒரு அரசியல் தலைவரையும் தாக்கும் பேசும் விதத்தில் காட்சிகளோ அல்லது வசனங்களோ இருக்க கூடாது என விஜய் கூறியதாக பேட்டி ஒன்றில் தெரிவித்தார் எச்.வினோத். 90 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்து விட்ட நிலையில், அடுத்த மாதத்திற்குள் பட பிடிப்பை நிறைவு செய்து போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே போல், இந்த படத்தின் டப்பிங் பணிகளை முடித்து கொடுத்து விட்டு, விஜய்யும் தீவிர அரசியலில் இறங்கி... ஒவ்வொரு தொகுதியாக சென்று மக்களை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், விஜய்யின் அரசியல் உணர்வை வெளிக்காட்டும் விதமாகவே 'ஜனநாயகன்; திரைப்படம் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது.
இறால் 65 முதல் கமகமக்கும் பிரியாணி வரை.! நிர்வாகிகளுக்கு விஜய்யின் தடபுடல் விருந்து- பட்டியல் இதோ
இப்படத்தின் கதைக்களம் குறித்து வெளியாகியுள்ள தகவலில், 'ஜன நாயகன் படத்தில், 'வாக்குகள் என்பது எவ்வளவு முக்கியம் என்றும், தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் பற்றியும் பேசும் விதத்தில், இதுவரை மக்களுக்கு தெரியாத சில தகவலைகளை வெளிச்சம் போட்டு காட்டும் விதத்தில் இருக்கும் என கூறப்படுகிறது. அதே போல் மிகவும் நேர்த்தியாக தற்கால அரசியலை இயக்குனர் எச் வினோத் இந்த படத்தின் மூலம் காட்சி படுத்தி உள்ளாராம். எனவே இப்படம் தளபதியின் அரசியல் வாழ்க்கைக்கு கைகொடுக்கும் விதத்தில், பக்காவாக பிளான் பண்ணி எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படக்குழு ரிலீஸ் பண்ண திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.