குட் பேட் அக்லி முதல் டெஸ்ட் வரை ஏப்ரலில் மட்டும் இத்தனை தமிழ் படங்கள் ரிலீசாகுதா?
மார்ச் மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், ஏப்ரல் மாதம் தமிழ் சினிமாவில் என்னென்ன படங்கள் ரிலீஸ் ஆகிறது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மார்ச் மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், ஏப்ரல் மாதம் தமிழ் சினிமாவில் என்னென்ன படங்கள் ரிலீஸ் ஆகிறது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Tamil Movie Releases on April 2025 : தமிழ் சினிமாவுக்கு மார்ச் மாதம் ஒரே ஒரு வெற்றியுடன் நிறைவடைந்துள்ளது. கடந்த மாதம் கிங்ஸ்டன், ஸ்வீட் ஹார்ட் போன்ற படங்கள் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆனாலும் வெற்றிவாகை சூட தவறிவிட்டது. இதையடுத்து ரம்ஜான் பண்டிகையை ஒட்டி ரிலீஸ் ஆன விக்ரமின் வீர தீர சூரன் படம் மட்டுமே ஹிட் லிஸ்ட்டில் இணைந்துள்ளது. இந்த நிலையில், ஏப்ரல் மாதம் தமிழ் சினிமாவில் என்னென்ன படங்கள் ரிலீஸ் ஆகிறது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
நயன்தாராவின் டெஸ்ட்
ஏப்ரல் மாதம் முதல் வெளியீடாக நயன்தாரா நடித்த டெஸ்ட் படம் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தை சசிகாந்த் இயக்கி உள்ளார். அவர் இயக்கும் முதல் படம் இதுவாகும். இப்படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாக மாதவன் நடித்துள்ளார். மேலும் சித்தார்த், மீரா ஜாஸ்மின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சக்தி ஸ்ரீ கோபாலன் இசையமைத்துள்ளார். அவர் இசையமைக்கும் முதல் படம் இதுவாகும். இப்படம் வருகிற ஏப்ரல் 4ந் தேதி நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது.
சிங்கிளாக ரிலீஸ் ஆகும் குட் பேட் அக்லி
ஏப்ரல் மாதம் தமிழ் சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் என்றால் அது குட் பேட் அக்லி தான். அஜித் நடிப்பில் கடைசியாக வெளிவந்த விடாமுயற்சி சொதப்பியதால் இப்படத்தை ரசிகர்கள் மலைபோல் நம்பி உள்ளனர். இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி உள்ளார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 10ந் தேதி சிங்கம் போல் சிங்கிளாக ரிலீஸ் ஆக உள்ளது.
இதையும் படியுங்கள்... அனிருத் பாட; அஜித் ஆட; அமர்களமாக வெளிவந்த குட் பேட் அக்லி படத்தின் God Bless U பாடல்
சச்சின் ரீ-ரிலீஸ்
நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2005-ம் ஆண்டு ரிலீஸ் ஆகி சக்கைப்போடு போட்ட திரைப்படம் சச்சின். இப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை கொண்டாடும் விதமாக சச்சின் படத்தை வருகிற ஏப்ரல் 18ந் தேதி ரீ-ரிலீஸ் செய்ய உள்ளனர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஜெனிலியா நடித்திருந்தார். ஜான் மகேந்திரன் இப்படத்தை இயக்கி இருந்தார். கலைப்புலி எஸ் தாணு தயாரித்திருந்த இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். கடந்த ஆண்டு ஏப்ரலில் விஜய் நடித்த கில்லி படம் ரீ-ரிலீஸ் ஆகி ஹிட்டான நிலையில், சச்சின் படமும் அதேபோல் வெற்றியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுந்தர் சி - வடிவேலு நடித்த கேங்கர்ஸ்
ஏப்ரல் மாதம் கோடை விடுமுறை ஸ்டார்ட் ஆகி உள்ளதால், குடும்பங்களை கவரும் வகையில் ஒரு நகைச்சுவை படமாக உருவாகி உள்ளது தான் கேங்கர்ஸ். இப்படத்தை சுந்தர் சி இயக்கி உள்ளார். இப்படத்தில் வடிவேலுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். காமெடி கலாட்டா நிறைந்த படமாக இந்த கேங்கர்ஸ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் வருகிற ஏப்ரல் 24-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. ஏற்கனவே அரண்மனை 4, மதகஜராஜா என அடுத்தடுத்து இரண்டு ஹிட் படங்களை கொடுத்த சுந்தர் சி, இப்படம் மூலம் ஹாட்ரிக் ஹிட் அடிக்க உள்ளார்.
இதையும் படியுங்கள்... கைப்புள்ளையுடன் மீண்டும் கைகோர்க்கும் சுந்தர் சி - வெளியான தரமான காமெடி காம்போ அப்டேட்!