சு வெங்கடேசன் எழுதிய வேள்பாரி புத்தகம் 1 லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக சென்னையில் விழா ஒன்று நடத்தப்பட்டது. அந்த விழாவில் இயக்குனர் ஷங்கர், நீயா நானா கோபிநாத், நடிகை ரோகிணி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். இந்த விழாவில் ரஜினிகாந்தின் பேச்சு மிகவும் ஹைலைட்டான ஒன்றாக பார்க்கப்பட்டது. தான் படித்த புத்தகங்கள் தொடங்கி, தன்னை பற்றிய விமர்சனங்களுக்கான பதிலடி வரை தன்னுடைய சரவெடி பேச்சால் அரங்கத்தை அதிரவைத்தார் ரஜினிகாந்த்.
24
வேள்பாரி விழாவில் ரஜினிகாந்த் பேச்சு
ரஜினி பேசியதாவது : “கலைவாணர் அரங்கில் கடந்த முறை ஒரு விழாவில் கலந்துகொண்டபோது ஓல்டு ஸ்டூடண்டுகளை எல்லாம் சமாளிப்பது கஷ்டம். அவர்கள் கிளாஸை விட்டு போகவே மாட்டாங்கனு சொல்லிட்டு அதுக்கப்புறம் சில விஷயங்கள் சொல்ல இருந்தேன். அது என்னவென்றால், ஓல்டு ஸ்டூடண்டுகள் அனுபவம் வாய்ந்தவர்கள். அவர்களெல்லாம் தூண்கள். அந்த மாதிரி அனுபவம் இல்லையென்றால் எந்த இயக்கமும், எந்த கட்சியும் தேறாது. அது தூண்கள் மட்டுமில்ல சிகரமும் கூட என சொல்ல நினைத்தேன். ஆனால் அதற்கு முன்னரே எல்லாரும் சிரிக்க ஆரம்பித்தவுடன் அதை கூற மறந்துவிட்டேன் என ரஜினி கூறினார்.
34
ரஜினியின் பேச்சால் விஜய் ரசிகர்கள் அப்செட்
இந்த உரையில் நடிகர் ரஜினிகாந்த் அனுபவம் வாய்ந்தவர்கள் இல்லையென்றால் எந்த கட்சியும் தேறாது என ரஜினிகாந்த் பேசியது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் அனுபவம் வாய்ந்தவர்கள் இல்லை என்பதை பற்றி தான் அவர் இப்படி சூசகமாக பேசி இருப்பதாக நெட்டிசன்கள் ஒப்பிட்டு வருகிறார்கள். இதைப்பார்த்த விஜய் ரசிகர்கள் ரஜினியை விமர்சித்தும் வருகிறார்கள். இதனால் ரஜினிகாந்தின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறி இருக்கிறது.
தொடர்ந்து அந்த விழாவில் ரஜினி பேசுகையில், தன்னை ஏன் இந்த விழாவுக்கு அழைத்தார்கள் என கேட்டு அரங்கத்தை சிரிப்பலையில் மூழ்க வைத்தார். ஷங்கர் சார் வேள்பாரி படம் எடுக்கிறார் அதனால் அவரை அழைத்திருக்கிறார்கள். கோபிநாத் திறமையான பேச்சாளர் என்பதால் அழைத்திருக்கிறார்கள், அதேபோல் ரோகிணி பத்தி சொல்லவே வேண்டாம். அவர் ரொம்ப அறிவாளி. ஒரு ஹீரோ யாராவது கூப்பிட வேண்டும் என்றால், சிவக்குமார் இருக்காரேப்பா... அவர் எவ்ளோ படிச்சிருக்காரு. அவரை கூப்டிருக்கலாமே. அவர் இல்லேனா கமல்ஹாசனை அழைத்திருக்கலாமே. அவர் எவ்வளவு பெரிய அறிவாளி, அவர்களையெல்லாம் விட்டுட்டு, 75 வயசுலயும் கூலிங் கிளாஸ் போட்டுட்டு, ஸ்லோ மோஷன்லயே நடந்து வர்ற இந்த ஆள ஏன் கூப்டிங்க என ரஜினிகாந்த் தன்னையே ட்ரோல் செய்தது அனைவரையும் கவர்ந்தது.