இயக்குநர் எழில் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘தேசிங்கு ராஜா 2’ படம் தற்போது வெளியாகி உள்ளது. இதன் முதல் பாகம் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இது முந்தைய படத்தின் கதையைப்போல இல்லாமல், புது கதையாக வந்துள்ளது. இதில் நடிகர் விமல், புதுமுகம் ஜனா நாதன் மற்றும் நடிகை பூஜிதா பொன்னாடா ஆகியோர் நடித்துள்ளனர்.
24
நடிகர் விமலின் தேசிங்கு ராஜா 2
அதுமட்டுமின்றி ரவி மரியா, சிங்கம் புலி, குக் வித் கோமாளி புகழ் போன்ற பெரும் நட்சத்திர பட்டாளங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. தேசிங்கு ராஜா 2 படம் ரசிகர்கள் இடையே கலவையான விமர்சனங்களை இது பெற்றுள்ளது.
34
தேசிங்கு ராஜா 2 பாக்ஸ் ஆபிஸ் வசூல்
பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் வெளியான ‘தேசிங்கு ராஜா 2’ திரைப்படம் இந்தியாவில் மட்டும் ரூ.1 கோடி நிகர வசூலை பெற்றுள்ளது என்றும், இதே நேரத்தில் உலகளவில் ரூ.1.20 கோடி மொத்த வசூல் பெற்றது என்றும் கூறப்படுகிறது. ‘தேசிங்கு ராஜா 2’ படத்திற்கு நல்ல தொடக்கம் கிடைத்துள்ள நிலையில், வார இறுதி மற்றும் வாரந்திர வசூல்களும் உயர்வாக இருக்கும் என்று திரையுலகினர் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.
விமலின் தேசிங்கு ராஜா 2 படத்துக்கு பிரபல இசையமைப்பாளர் வித்யாசாகர் இசையமைத்துள்ளார். இந்த வாரம் மேலும் சில படங்கள் வெளியாகி இருப்பதால், தேசிங்கு ராஜா 2வின் வசூல் அதிகரிக்குமா? குறையுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.