Sanjay dutt expresses anger at Lokesh kanagaraj : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடும் கோபத்தில் இருப்பதாக சஞ்சய் தத் கூறிய வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.
Sanjay dutt expresses anger at Lokesh kanagaraj : இயக்குநர் பிரேம் இயக்கத்தில் கேவிஎன் புரோடக்சன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் துருவ் ஜார்ஜா, ரீஷ்மா நானைனா, ரமேஷ் அரவிந்த், ஷில்பா ஷெட்டி, சஞ்சய் தத் ஆகியோர் பலர் நடிப்பில் உருவான படம் தான் கேடி தி டெவில். ரூ.31 கோடியில் எடுக்கப்பட்ட இந்தப் படம் வரும் 2026 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் தான் இந்தப் படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. அதில், படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.
24
லோகேஷ் கனகராஜ் மீது சஞ்சய் தத் கோபம்
அப்போது பேசிய பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மீது கடும் கோபத்தில் இருப்பதாக கூறினார். இது எதற்கு, ஏன் அப்படி சொல்கிறார் என்று பார்க்கும் போது தான் உண்மை புரிந்தது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜூன், மடோனா செபாஸ்டியன் ஆகியோர் உள்பட பலர் நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி வெளியான படம் தான் லியோ.
34
கேடி தி டெவில் டீசர்
இந்தப் படத்தில் விஜய்யுடன் உடன் இணைந்து சஞ்சய் தத் நடித்திருந்தார். இது குறித்து கேடி தெ டெவில் படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் பேசிய சஞ்சய் தத் கூறியிருப்பதாவது: நான் தளபதி விஜய்யுடன் இணைந்து நடித்தேன். அது எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. ஆனால், லோகேஷ் கனகராஜ் மீது கடும் கோபம். ஏனென்றால் லியோ படத்தில் பெரிய ரோல் கொடுக்கவில்லை. அவர் என்னை சரியாக பயன்படுத்தாமல் வேஸ்ட் செய்துள்ளார்.
44
சஞ்சய் தத்
அஜித் சாரையும் ரொம்பவே எனக்கு பிடிக்கும். நான் அவருக்கு ரொம்ப பிடிச்ச ஃப்ரண்ட். நான் ரஜினி சார் படம் பார்த்தான். இப்போது கூலி படத்திற்காக காத்துக்கொண்டிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். ரஜினிகாந்த் நடித்த கூலி படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்தப் படத்தில் ரஜினியுடன் இணைந்து நாகர்ஜூனா, உபேந்திரா, அமீர் கான், பூஜா ஹெக்டே ஆகியோர் பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் இடம் பெற்ற மோனிகா என்ற பாடல் லிரிக் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.