Samantha spotted with boyfriend in usa : சமந்தா அமெரிக்காவில் முக்கிய வீதிகளில் இயக்குநர் ராஜ் நிடிமோரு உடன் ஒன்றாக சுற்றி வரும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Samantha spotted with boyfriend in usa : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் வலம் வந்தவர் நடிகை சமந்தா. அதுமட்டுமின்றி தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராகவும் இருந்தார். அப்போதுதான் தெலுங்கு நடிகர் சாக சைதன்யாவை காதலித்து கரம் பிடித்தார். அவர்களுக்கு இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.
24
இவர் தான் சமந்தாவின் காதலரா
இதைத் தொடர்ந்து நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை திருமணம் செய்து கொண்டார். ஆனால், சமந்தா மட்டும் திருமண விவகாரத்திற்கு பிறகு இதுவரையில் திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையில் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் தான் அடிக்கடி இயக்குநர் ராஜ் நிடிமோரு உடன் காதல் கிசுகிசுவில் சிக்கி வந்தார். இருவரும் ஒன்றாக சுற்றும் புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வெளியானது.
34
2ஆவது திருமணம் எப்போது
இப்போது கூட சமந்தா மற்றும் ராஜ் நிடிமோரு இருவரும் அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் இப்போது வைரலாகி வரும் நிலையில் சமந்தா மறைமுக தனது காதலரை வெளிப்படுத்தியதாக தமிழ் டைம்ஸ் நைவ் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
44
அமெரிக்காவில் கொண்டாட்டம்
இதில் ராஜ் நிடிமோரு ஏற்கனவே திருமணம் ஆனவர். அவருக்கு முதல் மனைவியுடன் இன்னும் திருமணமும் நடக்கவில்லை. இதன் காரணமாகத்தான் சமந்தா இன்னும் அதிகாரப்பூர்வமாக தனது 2ஆவது திருமணம் குறித்து அறிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.