Published : Aug 21, 2022, 04:51 PM ISTUpdated : Aug 21, 2022, 04:52 PM IST
நடிகை ராதிகா இன்று தன்னுடைய 60-ஆவது பிறந்தநாளை மிக பிரமாண்டமாக கொண்டாடி வருகிறார். இதை முன்னிட்டு அவரது தோழிகள் மற்றும் திரையுலகை சேர்ந்தவர்களுக்கு பார்ட்டி வைத்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
மறைந்த பழம்பெரும் நடிகர் எம்.ஆர்.ராதாவின் மகளும், நடிகர் சரத்குமாரின் மனைவியுமான ராதிகா, தமிழ் சினிமாவில் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருகிறார்.
210
பாராதிராஜா இயக்கத்தில் வெளியான 'கிழக்கே போகும் ரயில்' என்கிற படத்தில் தன்னுடைய சினிமா பயணத்தை துவங்கிய ராதிகாவின் பயணம், அவரது 60 வயது வரை வெற்றிகரமாக பயணித்து கொண்டு தான் தான் உள்ளது.
முதல் படத்தில் கிராமத்து கிளியாக நடித்த ராதிகா, அடுத்தடுத்த படங்களில், மாடர்ன் கதாபாத்திரத்தை தேர்வு செய்து ரசிகர்களை தன்னுடைய நடிப்பால் மிரள வைத்தார். ரஜினி, கமல், பிரபு போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக இவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து வெற்றிப்படங்களாக அமைந்தது.
410
திருமணம் ஆன பின்னர், இவருக்கு ஹீரோயின் வாய்ப்புகள் குறைய துவங்கியது. எனவே தனது இரண்டாவது இன்னிங்ஸில் குணச்சித்திர வேடங்களில் நடிக்க துவங்கினார்.
எந்த கதாபாத்திரமாக இருந்தாலும், அதற்க்கு ஏற்றாப்போல் பொருந்தி நடிக்கும் திறமை கொண்டவர் ராதிகா. விஜய், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, சிம்பு, விக்ரம் போன்ற நடிகர்களின் படங்களில் நடித்து அசத்தி வருகிறார்.
610
சினிமா மட்டுமின்றி சின்னத்திரையிலும் சக்சஸ்புல் நடிகையாக வலம் வரும் ராதிகா, ராடான் என்கிற தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
திரையுலகம் தாண்டி, தன்னுடைய கணவர் சரத்குமார் நடத்தி வரும் கட்சியில் இணைந்து, அவருக்காக பல்வேறு இடங்களில் பிரச்சாரத்திலும் ஈடுபட்டார். ஆனால் அவர் போட்டியிட்ட அணைத்து இடங்களிலும் இந்திய சமத்துவ மக்கள் கட்சி தோல்வியை தழுவியதால், மீண்டும் திரைப்படங்கள் மற்றும் சீரியல் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.
810
இந்நிலையில் இன்று தன்னுடைய 60-வது பிறந்தநாளை நடிகை ராதிகா மிக பிரமாண்டமாக கொண்டாடி வரும் நிலையில், தன்னுடைய நண்பர்கள் மற்றும் திரையுலகை சேர்ந்த பல்வேறு பிரபலங்களுக்கு பார்ட்டி வைத்து அமர்க்கள படுத்தியுள்ளார்.
இதுகுறித்த புகைப்படங்கள் சில தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருவதோடு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
1010
60 வயதிலும் நடிகை ராதிகா, தன்னுடைய பிறந்தநாள் பார்ட்டியில்... மார்டன் உடை அணிந்து, மிகவும் யங்-காக இருக்கிறார். இவரது இந்த பிறந்தநாள் பார்ட்டியில், ஜோதிகா, சினேகா , தொகுப்பாளினி திவ்ய தர்ஷினி, அம்பிகா, ராதா, நடிகை லதா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.