திரையுலகில் நடிக்க வருவதற்கு முன்பு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு பேருந்தில் நடத்துனராக பணியாற்றினார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அதன் பின்னரே, நண்பர் மற்றும் அண்ணனின் உதவியுடன் நடிப்பு பள்ளியில் முறையாக பயிற்சி பெற்று, ஒரு நடிகராகவும் மாறினார். ஆனால் இவர் நடத்துனராக இருந்தபோதே, மேடை நாடகம் ஒன்றில் பீஷ்மராக நடித்துள்ளாராம். மேடை நாடகம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், பீஷ்மராக நடிக்க இருந்தவர் திடீரென வராத காரணத்தால், ரஜினிகாந்துக்கு வசனம் எல்லாம் சொல்லிக் கொடுத்து அவரை பீஷ்மராக நடிக்க வைக்க மேடையில் ஏற்றி உள்ளனர். அப்போது தன்னுடைய வழக்கமான ஸ்டைல் மற்றும் வேகமான நடையுடன் வந்து பீஷ்மரை போல் அமர்ந்து செம்ம ஸ்டைலாக வசனம் பேசியுள்ளார்.