பொதுவாக சினிமா துறையை ஒரு மாய உலகம் என்று அழைப்பார்கள், காரணம் இதில் யார், எப்பொழுது, எந்த இடத்தில் வைக்கப்படுவார்கள் என்பது இறுதிவரை மாயமாகவே இருக்கும். ஆனால் அதீத திறமை இருந்தால் இந்த மாய உலகத்தை தங்கள் வசம் கொண்டு வரலாம் என்பதையும் நிரூபித்து வரும் பல கலைஞர்கள் உண்டு இந்த தமிழ் சினிமாவில்.
அந்த வகையில் தனது திரையுலக வாழ்க்கையில் கடந்த சில வருடங்களாக பல புது முக இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அந்த படங்களை சூப்பர் ஹிட் ஆக்கியும் வருகிறார் பொன்னியின் செல்வர் ஜெயம் ரவி.
2015ம் ஆண்டு இவருடைய நடிப்பில் வெளியான ரோமியோ ஜூலியட் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் லட்சுமணன். அதன்பிறகு அதே ஆண்டு கல்யாண் கிருஷ்ணன் என்ற புதுமுக இயக்குனரின் இயக்கத்தில் வெளியானது தான் பூலோகம் என்ற திரைப்படம்.
கோமாளி திரைப்படத்தின் மூலம் பிரதீப் ரங்கநாதன், அடங்கமறு திரைப்படத்தின் மூலம் கார்த்திக் தங்கவேல் இன்னும் வெளிவராமல் இருக்கும் சைரன் திரைப்படத்தின் மூலம் ஆண்டனி பாக்யராஜ் மற்றும் தற்பொழுது வேல்ஸ் நிறுவனத்தின் 25வது திரைப்படமாக உருவாகி வரும் ஜீனி படத்தின் மூலம் அர்ஜுனன் என்ற ஆறு புதுமுகம் இயக்குனர்களை இவர் கடந்த எட்டு ஆண்டுகளில் அறிமுகம் செய்துள்ளார்.
இதில் பலர் தற்பொழுது முன்னணி இயக்குனர்களாக வளம் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. உண்மையில் பெரிய கலைஞனாக வளர்ந்துவிட்ட பிறகு, திறமையுள்ள பலரை வளர்த்து விடுவதும் ஒரு சிறந்த செயலாக பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள் : தலைசுற்ற வைக்கும் ஷாருக்கானின் டீ-சர்ட் விலை