2022-ம் ஆண்டு வெளியாகி படுதோல்வியை சந்தித்த பான் இந்தியா படங்களில் லைகர் திரைப்படமும் ஒன்று. விஜய் தேவரகொண்டா நாயகனாக நடித்திருந்த இப்படத்தை பூரி ஜெகன்நாத் இயக்கி இருந்தார். அவருடன் அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சார்மி, பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்து இருந்தனர். விஜய் தேவரகொண்டாவும் இதில் முதலீடு செய்திருந்ததாக கூறப்படுகிறது.